டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் சாப்பிடுறீங்களா?. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள் சருமத்தில்  உள்ள சீபம்  என்ற எண்ணெய்  சுரப்பியின்  இயற்கையான அளவைவிட அதிகமாக சுரக்கச் செய்வதால் முகத்தில் முகப்பருக்களை  ஏற்படுத்துகின்றது  .

tea with biscuit (1)

சென்னை- நம்மில்  பலருக்கும் டீ சாப்பிடும் போது பிஸ்கட் ,பஜ்ஜி, முறுக்கு, கடலைக்கறி போன்றவற்றை   இணை உணவாக சாப்பிடும் வழக்கம் இருக்கும். ஆனால் இவ்வாறு சாப்பிடும் போது சில  உபாதைகளை ஏற்படுத்தும் என டாக்டர் கார்த்திகேயன் தனது யூட்யூப்  பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார் .

டீ மற்றும் பிஸ்கட்;

பிஸ்கட் வகைகளில் அதிக அளவு கலோரிகள் தான் இருக்கும் .கார்போஹைட்ரேட், சர்க்கரை, சோடியம் ,கொழுப்பு போன்ற சத்துக்களை உள்ளடக்கியதாகும். நார் சத்துக்கள் மற்றும் நூண்  சத்துக்கள் இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து உடலில் உள்ள நீர் சத்தை உறிஞ்சிவிடுகிறது.

அது மட்டுமல்லாமல் குடலில் உள்ள நல்ல பாக்ட்டீரியவை  பாதிக்க செய்கிறது. டீயுடன் பிஸ்கட்  சேர்த்து சாப்பிடும் போது குடலின் PH  லெவலில் மாறுபாடு ஏற்பட்டு நாளடைவில் ஜீரண மண்டலத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும்.

இந்த சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள் சருமத்தில்  உள்ள சீபம்  என்ற எண்ணெய்  சுரப்பியின்  இயற்கையான அளவைவிட அதிகமாக சுரக்கச் செய்வதால் முகத்தில் முகப்பருக்களை  ஏற்படுத்துகின்றது  .

டீ மற்றும் எலுமிச்சை;

டீயுடன் எலுமிச்சை சேர்த்து சாப்பிடக்கூடாது என்று டாக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கின்றார். ஏனெனில் டீ யில் உள்ள டானின் மற்றும் ஆக்சிலேட் சத்துக்கள் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலத்துடன் சேரும் போது நம் உடலுக்கு நன்மை இல்லை என்று கூறுகிறார்.

டீ மற்றும் எண்ணெயில் பொறித்த  உணவுகள்;

டீயுடன் கடலை மாவால் தயாரிக்கப்பட்ட போண்டா, பஜ்ஜி, முறுக்கு போன்ற எண்ணெயில் பொறித்த  பலகாரங்களை சாப்பிடும் போது குடல் பகுதியை பாதிக்க செய்கிறது. தினமும் இவ்வாறு எடுக்கும் போது நாளடைவில் குடலில் நல்ல கிருமிகளின் சுற்றுச்சூழலை மாற்றி குடல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

டீ மற்றும் மஞ்சள்;

டீயுடன் மஞ்சள் சேர்த்து சாப்பிடக்கூடாது. டீயில் உள்ள டானினும்  மஞ்சளில் உள்ள குங்குமின் சேரும்போது எதுக்களிப்பு, அசிடிட்டி ,வாய்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது .[பாலுடன் மஞ்சள் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்].

டீ மற்றும் இரும்பு சத்து உணவுகள்;

டீ சாப்பிடும் போது அல்லது டீ சாப்பிட்ட பின்போ இரும்பு சத்து நிறைந்த  கீரைகள், பழங்கள் மற்றும் சுண்டல் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் உள்ள இரும்பு சத்தை உடல் உறிஞ்சுவதை டீயில்  உள்ள டானின் தடுக்கிறது.

டீ மற்றும் நட்ஸ்;

டீயுடன் ,வேர் கடலை ,முந்திரிப்பருப்பு, பாதாம் போன்ற விதை  வகைகளை சாப்பிடக்கூடாது. அதில் உள்ள நன்மைகளை  நம் உடல் உட்கிரகித்து  கொள்வதை தடுக்கிறது. மேலும் டீ போன்ற சூடான உணவுப் பொருள்களுடன் குளிர்ச்சியான உணவுப் பொருள்களை சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது .குறிப்பாக தயிர், ஐஸ்கிரீம், ஜூஸ் வகைகள் போன்றவற்றை டீயுடன்  எடுத்துக் கொள்ளவதை தவிர்க்கவும் .

ஆகவே இந்த உணவுப் பொருள்களை டீயுடன்  எப்போதாவது எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் எப்போதுமே எடுத்துக் கொள்வதை தவிர்த்து விட்டு ஆரோக்கியமான டீ வகைகளான  ஆவாரம்பூ டீ , செம்பருத்தி டீ ,சங்கு பூ டீ  போன்றவற்றை வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொண்டால் நம் உடலின்  ஆரோக்கியம் மேம்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்