Bitter Gourd : வீட்டில் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட மறுகிறார்களா..? அப்ப இப்படி செய்து கொடுங்க..!

Bitter guard

நம் அனைவரின் வீட்டிலும், பாகற்காய் சாப்பிடாதவர்கள் சிலர் இருப்பார்கள். ஏனென்றால், பாகற்காய் என்றாலே கசப்பு சுவை கொண்டது என்பதால்,  சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், பாகற்காய் என்பது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி ஆகும்.

பாகற்காயில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில், சாப்பிட மறுப்பவர்கள் கூட விரும்பி சாப்பிடக்கூடிய அளவுக்கு அசத்தலான பாகற்காய் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • பாகற்காய் – 2
  • தயிர் – 4 கரண்டி
  • மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
  • மிளகாயை தூள் – அரை ஸ்பூன்
  • உப்பு – தேவையான ளவு
  • கரம் மசாலா – அரை ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் பாகற்காயை நீளவாக்கில் ஒல்லியாக அதனுடன் தயிர் மற்றும் சிறிதளவு உப்பு தடவி பத்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

இதையும் படிங்க – Blood : ஒரே வாரத்தில் உங்கள் உடலில் இரத்தம் அதிகரிக்க இதை சாப்பிடுங்க..!

அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் ஊற வைத்த பாகற்காயை அதனுடைய போட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு நன்கு பொரிய விட்டு எடுக்க வேண்டும். இப்போது அதனுடன் சிறிதளவு கருவேப்பிலையை தூவி விட வேண்டும். இப்போது சுவையான பாகற்காய் பொரியல் தயார்.

நமது வீடுகளில் பாகற்காய் சாப்பிடாதவர்கள் இருந்தால், இப்படி வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்