சமைத்து முடித்த பின் உணவில் உப்பு சேர்க்க கூடாது! ஏன் தெரியுமா?

Default Image

உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை விட இந்தியர்களாகிய நாம் அதிக அளவிலான உப்பு பயன்படுத்துகிறோம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுதான் உப்பை பயன்படுத்த வேண்டும்.

இந்தியர்களைப் பொறுத்தவரையில் அவர்களது உணவில் புளிப்பு, உப்பு, காரம் என்பது சற்று அதிகமாகவே காணப்படும். ஆனால் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதை விட இந்தியர்களாகிய நாம் அதிக அளவிலான உப்பு பயன்படுத்துகிறோம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவுதான் உப்பை பயன்படுத்த வேண்டும். ஆனால் நாம் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 10.9 கிராம் உப்பை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. தற்போது இந்த பதிவில், நாம் நமது உணவில் உப்பை சேர்க்கும் முறை சரிதானா என்பத பற்றி பார்ப்போம்.

நாம் உப்பு அதிக அளவில் சாப்பிடும்போது உயர் ரத்த அழுத்தம், வயிறு புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சமைக்கப்படாத உப்பினை அதிகமாக சாப்பிடும் போது, அது இதய சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, நரம்பு மண்டலத்தில் பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

சமைத்து முடித்த பின்பு உணவில் உப்பு சேர்ப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனென்றால், உணவில் உப்பு சேர்த்து வேக வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள இரும்பு சத்தை நமது உடல் மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் சமைத்து முடித்த பின் உணவில் உப்பை சேர்க்கும் போது, அதில் உள்ள இரும்பு சத்து அப்படியே காணப்படும். இதனால் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நாம் உட்கொள்ள வேண்டிய உப்பு விட அதிக அளவு உப்பை தான் நாம் எடுத்துக் கொள்கிறோம். சொல்லப்போனால், 10 கிராம் உப்பில் 4000 கிராம் சோடியம் காணப்படுகிறது. இது நமது உடலில் பல்வேறு வகையான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

அதேசமயம் நாம் அதிகமாக பயன்படுத்தும் போது ஆபத்து ஏற்படுவது போல குறைவான உப்பு பயன்படுத்தும் போதும் நமது உடலில் ஆபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஒரு ஆய்வு கூறுகையில், அதிகமாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி அளவு பேர் குறைவான உப்பை பயன்படுத்துவார்கள் என கூறப்படுகிறது. உப்பை அதிக அளவு சேர்த்து சாப்பிட்டால் தான் எனக்கு பிடிக்கும் என விரும்புவர்கள் சாதாரண உப்பை விட ராக் சால்ட் எனப்படும் உப்பை சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் எந்தவித பக்கவிளைவும் ஏற்படாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்