கொத்தமல்லி- கொத்தமல்லி தொக்கு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் நான்கு ஸ்பூன் ஊற்றி அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அது கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன் புளியும் பெருங்காயமும் சேர்த்து கிளறி விடவும் .
பிறகு மல்லித்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை கிளறிவிட்டு அதிலே கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும். கொத்தமல்லி இலைகள் ஓரளவுக்கு வதங்கினால் போதுமானது. பிறகு அதை ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் தண்ணீர் சேர்க்கவே கூடாது.
மீண்டும் மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கிளறவும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.
பின் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கவும் . இப்போது சுவையான கம கமவென கொத்தமல்லி தொக்கு தயார். இது ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் சேகரித்து வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் கெடாமல் இருக்கும். இட்லி தோசை சாதத்திற்கு மிக சுவையாக இருக்கும்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…