குழந்தைகளுக்கும் மனஅழுத்தம் ஏற்படுமா?
குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தம்.
குழந்தைகள் என்றாலே எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருப்பார்கள் என்று நாம் நினைப்பது உண்டு. தானும் மகிழ்ச்சியாக இருந்து பிறரையும் மகிழ்விக்கும் குணம் கொண்டவர்கள் என்று தான் நாம் அறிந்திருப்போம். ஆனால் குழந்தைகளுக்கும் பல விதத்தில் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு எந்தெந்த விதத்தில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
குடும்பத்தில் குழப்பம்
பல குடும்பங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகள் குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் தானே அவர்களுக்கு என்ன தெரிய போகிறது என்று நாம் நினைப்பதுண்டு. ஆனால், இந்த பிரச்சனைகள் ஏதோ ஒரு விதத்தில் அவர்களையும் பாதிக்கிறது.
நெருக்கமானவர்களின் பிரிவு
குழந்தைகளை பொறுத்தவரையில், யாருடன் வேண்டுமானாலும் மிக எளிதில் பழகி விடுவார். ஆனால், அந்த உறவை விட்டு அவர்கள் எளிதில் பிரிவதும் கடினம். அவ்வாறு அந்த உறவில் பிரிவு உண்டாகும் போது, அது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
செல்லப்பிராணிகள்
நாம் நமது வீடுகளில் செல்ல பிராணிகளை ஆசையாய் வளர்ப்பதுண்டு. அவைகள் மீது நமது குழந்தைகளும் அளவு கடந்த பாசம் வைப்பதுண்டு. அந்த செல்ல பிராணிகள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்து விட்டால், இதுவும் குழந்தைகளுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.