தீபாவளி ஸ்பெஷல் ..! கிரிப்ஸியான தட்டை முறுக்கு செய்ய சூப்பரான டிப்ஸ்..!
தீபாவளியின் ஸ்பெஷல் காரமான தட்டை முறுக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்..
சென்னை – தீபாவளியின் ஸ்பெஷல் காரமான தட்டை முறுக்கு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்..
தேவையான பொருட்கள்;
- அரிசி மாவு =அரை கிலோ
- பாசிப்பருப்பு= 50 கிராம்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- வெள்ளை எள் =2 ஸ்பூன்
- கருவேப்பிலை= சிறிதளவு
- வெண்ணை= 50 கிராம்
- பச்சை மிளகாய்= 4
- இஞ்சி= 2 இன்ச்
- வேர்க்கடலை =அரைக்கப்
- எண்ணெய் =பொரிக்க தேவையான அளவு
செய்முறை;
அரிசி மாவில் பாசிப்பருப்பு , சீரகம் ,பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, வறுத்த எள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .[அரிசி மாவு பதப்படுத்த பட்ட அரிசி மாவாக இருந்தால் நல்லது] .இப்போது மிக்ஸியில் பச்சை மிளகாய் ,இஞ்சி ,வேர்க்கடலை ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து அரிசி மாவில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் .அதனுடன் வெண்ணையும் சேர்த்து கலந்து பிறகு 50 கிராம் கடலை எண்ணெயை சூடாக்கி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது சுடு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு சாப்ட்டாக பிசைந்து கொள்ளவும் .
பிறகு பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். இப்போது அந்த உருண்டைகளை ஒரு எண்ணெய் தடவிய பாலித்தீன் கவரில் வைத்து தட்டையான கிண்ணத்தை வைத்து அமுத்தி தட்டை வடிவில் செய்து ஒரு துணியில் வைத்து விட வேண்டும் .இந்த சமயத்தில் அந்த தட்டைமாவில் சிறு சிறு ஓட்டை போட்டு கொள்ளவும் .[அப்போது தான் எண்ணையில் பொரிக்கும் போது பூரி போல் எழும்பாது] . இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் தட்டையாக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு பொறிக்க தேவையான அளவு எண்ணெயை சூடாக்கி செய்து வைத்துள்ள தட்டை மாவை சேர்த்து மிதமான தீயில் இரு புறமும் பொரித்தெடுக்கவும். இப்போது மொறு மொறுவென தட்டை முறுக்கு ரெடி..