தீபாவளி ஸ்பெஷல்.! கொங்கு நாட்டு இனிப்பு சீடை இவ்வளவு ஈஸியா செய்யலாமா.?
மறைந்து வரும் பாரம்பரிய பலகாரத்தில் சீடையும் ஒன்று. அந்த வகையில் கொங்கு நாட்டு ஸ்டைலில் மிருதுவான இனிப்பு சீடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –மறைந்து வரும் பாரம்பரிய பலகாரத்தில் சீடையும் ஒன்று. அந்த வகையில் கொங்கு நாட்டு ஸ்டைலில் மிருதுவான இனிப்பு சீடை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- பச்சரிசி= ஒரு கப்
- வெல்லம்= 200 கிராம்
- கருப்பு எள்ளு =ஒரு ஸ்பூன்
- வெள்ளை எள்ளு= ஒரு ஸ்பூன்
- கடலை எண்ணெய்= பொறிக்க தேவையான அளவு
- நல்லெண்ணெய்= ஒரு ஸ்பூன்
- ஏலக்காய்= மூன்று.
செய்முறை;
முதலில் பச்சரிசியை இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து நிழலில் அரை மணி நேரம் உலர்த்திக் கொள்ள வேண்டும்.
பிறகு லேசாக ஈரம் இருக்கும் போதே அதை மிக்ஸியில் நன்கு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் அமுத்தி மூடி வைத்துவிட வேண்டும் .அப்போதுதான் ஈரம் காயாமல் இருக்கும். இப்பொழுது வெல்ல பாகுவை தயார் செய்யவும் .பாகுவை தண்ணீரில் லேசாக எடுத்து ஊற்றினால் அது கரையாமல் கையில் உருட்ட வர வேண்டும் இதுவே சரியான பக்குவம் ஆகும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு நாம் அரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக் கிளற வேண்டும்.
நன்கு கிளறிய பின் அதில் கருப்பு எள் , வெள்ளை எள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் கலந்து விட்டு மேலாக ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மூடி வைத்துவிட வேண்டும். ஒரு நாள் வரைக்கும் அப்படியே வைத்து விட வேண்டும். ஒரு நாள் கழித்து தட்டை வடிவில் உருண்டைகளை உருட்டி எண்ணெய்யை காய வைத்து பிறகு மிதமான தீயில் வைத்துக்கொண்டு உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்பொழுது சாப்டான சீடை தயார் . இந்த மாவை அதிரசம் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.