Diwali Receipe : ஐந்தே நிமிடத்தில் அட்டகாசமான மொறு மொறு பலகாரம் ரெடி…!

varuval

நாம் நமது வீடுகளில் தீபாவளி என்றாலே பல வகையான பலகாரங்கள் செய்வது வழக்கம். அந்த வகையில், இனிப்பு, காரம் என பல வகையான பலகாரங்கள் நமது தீபாவளி கொண்டாட்டத்தில் இடம் பெரும். தற்போது இந்த பதிவில், எளிய முறையில், மொறு மொறு என அசத்தலான பலகாரம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை 

  • அரிசி மாவு – 1 கப்
  • கடலை மாவு – அரை கப்
  • பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்
  • உப்பு – கால் டீஸ்பூன்
  • கருப்பு எள்ளு – 1 டீஸ்பூன்
  • உருக்கிய வெண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலந்து விட வேண்டும்.

நன்கு கலந்த பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, அதனை சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரிப்பன் பக்கோடாவிற்கு பயன்படுத்தும் அச்சை எடுத்து, அதனை பிழியும் கருவியும் மாட்டிக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடேறிய பின், அதனுள் நமக்கு தேவையான அளவுக்கு நீளமாக பிழிந்து விட வேண்டும். பின் அது நன்கு பொன்னிறமாக வந்த பின் எடுத்துவிட வேண்டும். இப்பொது சுவையான மொறு மொறு பகோடா தயார்.

இதனை நாம் இரண்டு வாரங்கள் வரை வேண்டுமானாலும், ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து தேவைப்படும் போது எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இந்த உணவினை சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

பொதுவாக பெரும்பாலானவர்கள் இனிப்பு பலகாரத்தை விட கார பலகாரத்தை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பலகாரத்தை செய்து கொடுக்கலாம். இதில் பெரிய அளவில் கார தன்மை இருக்காது என்பதால், குழந்தைகளுக்கு கூட பயமின்றி கொடுக்கலாம். நாம் கடைகளில் பலகாரங்களை வாங்குவதை, இவ்வாறு வீடுகளிலேயே செய்யும் போது, செலவும் மிச்சமாவதோடு, சுத்தமான முறையில் உண்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்