ரம்ஜானுக்கு இந்த ஸ்பெஷல் டிஷை செஞ்சு அசத்துங்க…சுவையான மட்டன் குருமா.!
Mutton Kurma: ரம்ஜான் பண்டிகை வந்தாச்சு…வழக்கமாக ரம்ஜான் பண்டிகை அன்று இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் வீடுகளில் அறுசுவையான அசைவ உணவுகளை சமைப்பார்கள்.
குறிப்பாக இந்நாளில் மட்டன் தான் அதிகம் சமைப்பார்கள். நம்ம இப்போது பிரியாணிக்கு ஏற்ற சுவையான மட்டன் குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் 1 kg
- கிராம்பு = 7-8
- இலவங்கப்பட்டை = 2
- மிளகுத்தூள் = 1 -1/2
- ஏலக்காய் = 3
- முந்திரி பருப்பு = 10
- பாதாம் = 13
- சின்ன வெங்காயம் = 1 -1/2 கப்
- இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் விழுது
- கப் தயிர் = 1
- கொத்தமல்லி தூள் = 2 டேபிள் ஸ்பூன்
- காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் = 2 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் = ½ டீஸ்பூன்
- சீரக தூள் = ½ டீஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கவும், அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருந்த மட்டனை சேர்த்து 8 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் நாம் தாயார் செய்து வைத்திருந்த மசாலா விழுது மற்றும் இஞ்சி பூண்டு மிளகாய் விழுது சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
விதக்கிய பின்பு, தயிர், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரக தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். மட்டன் நன்றாக வேகும் வரை 2 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து நன்றாக மட்டனை வேக வைக்கவும், கடைசியாக பாதாம் துண்டுகள், புதினா இலைகள், கொத்தமல்லி இலைகள் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.