சிறுகுறு வியாபாரிகளின் வாழ்வில் இடி விழுந்த நாள்! இன்று ஜி.எஸ்.டி தினம்!
ஜி.எஸ்.டி தினம் மத்திய அரசால் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. ஜூன் -30-ம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர், அருண் ஜெட்லீ அவர்கள் ஜி.எஸ்.டி மசோதாவை தாக்கல் செய்தார்.
மத்திய அரசு அமல்படுத்திய இந்த ஜி.எஸ்.டி வரியானது, சிறுகுறு வியாபாரிகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மத்திய நிதியமைச்சகம் சார்பில், ஜிஎஸ்டி தினம் கொண்டாடப்பட்டுகிறது.
சிறுகுறு வியாபாரிகளும், குடிசை தொழில் செய்யும் வணிகர்களும் ஜிஎஸ்டி வரியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜிஎஸ்டி-யில் புதிய வரி அறிமுகம் செய்வதாக வந்த தகவல் சிறுகுறு வியாபாரிகள் மற்றும் குடிசை தொழில் செய்யும் வணிகர்கள் மத்தியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.