அடடே!ஜப்பானியர்களின் நீண்ட ஆயுளுக்கு இதான் காரணமா?

japanese (1)

Japanese lifestyle -ஜப்பானியர்களின்  ஆரோக்கியமான ஆயுளுக்கு  என்ன காரணம் என்பதை பற்றி இப்பதிகள் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக அதிக வயதுடன் வாழ்வதில் ஜப்பானியர்கள் தான். அதுவும் 85 லிருந்து 110 வயது வரை ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். ஆரோக்கியத்தில் மட்டுமல்ல தொழில்நுட்பத்திலும் வளர்ந்து வரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று.

ஆனால் நம் இந்தியர்கள் 72 வயது வரை ஆயுள் காலமாக இருந்தாலும் அதிலும் மருந்து மாத்திரைகளுடன் தான் மீத நாட்கள் கழிகின்றது. அப்படி ஜப்பானியர்கள் என்னதான் ரகசியங்களை ஒழித்து வைத்துள்ளார்கள் வாங்க தெரிஞ்சுக்கலாம்..

ஜப்பானியர்களின் ரகசியங்கள்:

ஜப்பானியர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நடைப்பயணம் அல்லது சைக்கிளை பயன் படுத்துகிறார்கள்.

நாமெல்லாம் வாரத்தில் ஒருமுறை விடுமுறை எடுத்துக் கொள்வோம். ஆனால் அவர்கள் அந்த விடுமுறை நாட்களில் அவரவர்களுக்கு பிடித்த செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள் .குறிப்பாக சைக்கிளிங் ,ரன்னிங் ஸ்விம்மிங் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவரவர்களுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுகின்றனர் தமக்கு வயதாகி விட்டதே என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதில்லை அவர்களின் சுய வேலைகளை அவர்களை செய்து கொள்கின்றனர்.

உணவு முறை:

உணவு முறையை பொறுத்த வரை வறுத்த உணவுகளை அவர்கள் அதிகம் விரும்புவதில்லை. புளித்த  உணவுகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, கடல்பாசிகள், மீன் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்கின்றார்கள். சிவப்பு இறைச்சியை தவிர்த்து விடுகிறார்கள் .

அதுவும் சாப்பிடும் போது மெதுவாகத்தான் சாப்பிடுவார்கள். எப்போது சாப்பிட்டாலும் எண்பது சதவீதம் தான் உட்கொள்வார்கள். மீதம் 20% வயிற்றை காலியாக வைத்துக் கொள்வார்கள். அதாவது சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு வந்ததுமே நிறுத்தி விடுகிறார்கள்.

பிளாக் டீ, க்ரீன் டீ போன்ற அதிக ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ள டீகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறார்கள்.

சற்று யோசித்துப் பாருங்கள் இந்த ரகசியங்களை நம் முற்காலத்தில் பயன்படுத்தி வந்தது தான், தற்போது மாடல் உலகில் இது மறைந்து விட்டது மறந்தும் விட்டோம்.

புளித்த உணவுகள்  சாப்பிடுவது, சைக்கிளில் செல்வது போன்றவற்றை நாம் முன்பு செய்து கொண்டிருந்தது தான். ஆகவே மீண்டும் நம் பழைய வாழ்க்கை முறையை பின்பற்றி  நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்