அடடே..! உடற்பயிற்சியை விட ஸ்விம்மிங் சிறந்ததா?..

swimming

Swimming-நீச்சல் பயிற்சி செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நீச்சல் பயிற்சி ;

உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் பல வித உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு பயிற்சியை செய்தாலே போதும் .அதுதான் நீச்சல் பயிற்சி. நீச்சல் பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சியை வாழ்நாளில் ஒருமுறை கற்றுக் கொண்டால் கடைசிவரையிலும் மறக்காது.

இந்த நீச்சல் பயிற்சியை செய்யும்போது நம் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் இயக்கப்படுகிறது. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் வருங்காலத்தை பற்றி கவலைப்படாமல் வாழலாம் என்று பெரியோர்கள் கூறுவார்கள் அந்த வகையில் உடற்பயிற்சிகளில் நீச்சல் பயிற்சி சிறந்ததாக கூறப்படுகிறது.

நீச்சல் பயிற்சியை கற்றுக் கொள்ளும் போது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாம் இது ஒரு தற்காப்பு கலையாகவும் கூறப்படுகிறது. உலகம் மூன்று மடங்கு தண்ணீரால் சூலப்பட்டுள்ளது. ஆனால் சிலருக்கு நீச்சல் தெரிவதில்லை நீச்சல் நம் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கும் மற்றவர் உயிர்களை காப்பாற்றுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் .மேலும் உடல் நலத்திற்கும் சிறந்தது.

நீச்சல் பயிற்சியின் ஆரோக்கிய நன்மைகள்;

  • அதிக அளவில் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் போது பசி தூண்டப்படுகிறது. நல்ல செரிமான சக்தி ஏற்படுத்தி மலச்சிக்கல் வருவதையும் தடுக்கிறது. ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சி செய்யும் போது 800 கலோரிகள் வரை  கரைக்கப்படுகிறது. இதன் மூலம் தொப்பை குறைக்கப்படுகிறது.
  • அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள மொத்த எடையும் தண்ணீரே  தாங்குகிறது. அதனால் மூட்டு வலி, கழுத்து வலி, கால் வலி பிரச்சனைகள் குறைகிறது.
  • மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்கள் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளும் போது மன கவலை, அழுத்தம் குறைக்கப்படுகிறது .மனதை ஒருங்கிணைத்து சிந்தனை திறனை மேம்படுத்துகிறது.
  • ரத்த ஓட்டம் சீராக்கப்படுவதால் இதயம் மற்றும் நுரையீரல் வலுவாக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் காலகட்டங்களில் அவர்களின் மனநிலையை சீராக்க நீச்சல் பயிற்சி சிறந்த பலனை கொடுக்கிறது.
  • அதிக உடல் எடை கொண்டவர்கள் நீச்சல் பயிற்சி மேற்கொள்ளும் போது உடல் எடை குறைக்கப்படுகிறது .அதனால் எடை குறைக்க நினைப்பவர்கள் உடற்பயிற்சியுடன் நீச்சல் பயிற்சியையும் செய்து வரலாம் .

நீச்சல் பயிற்சி செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை ;

நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் ஸ்விம்மிங் செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் போதுமான அளவு குடித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தொண்டை வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம் .

மேலும் வாரத்திற்கு ஆறுமுறையாவதும் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஆவது நீச்சல் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

ஆகவே நீச்சல் பயிற்சி செய்வது  ஆரோக்கியத்திற்காக மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் உங்களுக்கு கொடுக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park