அடடே! இந்த பானம் முடி உதிர்வை குறைக்குமா?

hair fall

முடி  உதிர்வு -நம்மில் பலரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்வு, முடி பாதியிலே  உடைந்து போதல். இதனால் ஒரு சிலருக்கு மன உளைச்சல் கூட ஏற்படுகிறது. இந்த முடி உதிர்வு ஏற்பட காரணம் மற்றும் அதனை தடுக்கும் ஒரு பானம் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

முடி உதிர்வு ஏற்பட காரணங்கள்:

முடி வளர செய்ய பலவிதமான எண்ணெய்களும், மருந்து பொருட்களும் வந்துவிட்டது. ஆனாலும் இந்த முடி ஏன் உதிர்கிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொடுகு:

பொடுகு இருந்தால் முடியின் வேர்க்கால்கள் பாதிக்கும், இதனால் முடி வேரோடு விழ துவங்கும். நாம் முடிக்கு எண்ணெய்  வைக்கும் போது அந்த எண்ணெய் அதிக அழுக்குகளை ஈர்க்கும் , இதனால் தலையில் பொடுகு ஏற்படும். இதனை தடுக்க நாம் தினமும் தலைக்கு தண்ணீர் மட்டுமே ஊற்றி குளிக்க வேண்டும். ஷாம்பு சீயக்காய் போன்றவற்றை தினமும் பயன்படுத்தாமல் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் பயன்படுத்தினால் போதும்.

ஷாம்பு வகைகள்:

மாற்றி மாற்றி நாம் ஷாம்பு வகைகளை பயன்படுத்தும் போதும் முடி உதிர்வு ஏற்படலாம். மேலும் அதிகமாக முடியை தேய்த்து குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படும்.

உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். அது மட்டுமில்லாமல் மன அழுத்தம், உடல் சூடு இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும். ஒரு சிலருக்கு தண்ணீர் சேராமல் கூட முடி உதிரச் செய்யும்.

முடி உதிர்வை தடுக்கும் உணவுகள்:

முடியின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது கீரைகளும், பயிறு வகைகளும் தான்.

கீரைகள்:

கீரையில் பசலைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, சிறுகீரை ஆகியவற்றை வாரத்தில் இரண்டு முறை  மாற்றி மாற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பயிர் வகைகள்:

பயிறு வகைகளில் பட்டாணி, சுண்டல், பச்சைப்பயிறு, தட்டப்பயிறு, உளுந்து இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தினமும் ஒரு முட்டை மற்றும் மதிய வேலைகளில் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.

ஜூஸ் தயாரிக்கும் முறை:

வெள்ளரிக்காய் ஒன்று, கருவேப்பிலை ஒரு கைப்பிடி,  பெரிய நெல்லிக்காய் விதை நீக்கியது  ஒன்று, 100 எம்எல் தண்ணீர் ஊற்றி இவற்றை  அரைத்து எடுத்து மீண்டும் 100 எம்எல் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 250 எம் எல் எடுத்துக் கொள்ளவும். வயிற்றில் புண் அல்சர் தொந்தரவு இருப்பவர்கள் உணவுக்குப் பிறகு அதாவது உணவு இடைவேளைகளில் எடுத்துக் கொள்ளலாம்.

இவற்றை எடுத்துக் கொண்டால் முடி உதிர்வு படிப்படியாக குறைந்த விடும் அது மட்டுமல்லாமல் நல் உடலுக்கு நல்ல புத்துணர்வையும் தரும். எனவே நமக்கு முடி உதிர்வு இருந்தால் அதை உடனடியாக நாம் கருத்தில் கொண்டு முடி உதிர்வை தடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும் இல்லை என்றால் இருக்கும் முடிகளும் உதிர்ந்து விடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi