நன்றி இந்த வார்த்தையை அடிக்கடி நாம் உச்சரிக்கும் போது பல மாற்றங்களை கண்கூடாக நாம் காணலாம் அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சூழலை உண்டாக்கும், அது நாம் எதிர்பார்த்தவாறு அமைந்தால் அதற்கு நாம் மகிழ்ச்சி அடைவோம்.
எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக நடந்தால் கிட்டத்தட்ட மன அழுத்தத்திற்கு போய்விடுவோம். சற்று யோசித்துப் பாருங்கள் என்றாவது நாம் நமக்கு நடந்த நல்ல விஷயங்களுக்கு இந்த பிரபஞ்சத்திற்கோ அல்லது இறைவனுக்கே நன்றி சொல்லி இருப்போமா?..
தினமும் நீங்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்லிப் பாருங்கள் நிச்சயம் படிப்படியாக உங்கள் வாழ்க்கை மாறுவதை காணலாம். உதாரணமாக நீங்கள் ஒருவருக்கு ஒரு உதவி செய்து அதைப் பெற்றவர் உங்களுக்கு நன்றி சொல்லவில்லை என்றால் உங்கள் மனதில் என்ன தோன்றும்? ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என உங்கள் மனதில் ஒரு சஞ்சலப்பு தோன்றும்.
இதுவே அவர் நன்றி சொல்லிவிட்டால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். அதுபோல்தான் இந்த பிரபஞ்சமும் உங்களுக்கு நிறைய நன்மைகள் கொடுத்திருக்கும் அதற்கு நீங்கள் நன்றி கூறினால் இந்த பிரபஞ்சம் மகிழ்ச்சி அடைந்து இன்னும் பல நல்லவற்றை அள்ளித் தரும். இந்த உலகில் எத்தனையோட பேருக்கு கண் இல்லாமல் அல்லது கால் இல்லாமல் ஏன் ஒரு வீடு கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் நாம் நல்ல ஆரோக்கியத்தோடு, தங்குவதற்கு ஒரு வீடும், ஏன் இந்த பதிவை பார்க்க ஒரு டச் செல்போனும் வைத்திருப்போம் ஆனால் அதற்கு நன்றி சொல்லி இருக்கவே மாட்டோம். இல்லாத ஒன்றை நினைத்து கவலை கொள்ளாமல் இருப்பதற்கு முதலில் நன்றி சொன்னால் நிச்சயம் ஒரு நாள் இல்லாததும் கிடைத்து விடும். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் பிரச்சனை இருக்கும் அது பணக்காரரோ ஏழையோ அல்லது நடுத்தர மக்களோ நிச்சயம் ஒரு பிரச்சனை இருக்கும்.
“தனக்கும் கீழ் உள்ளவர்கள் கோடி” என பாடல் வரிகள் கூட உள்ளது. ஆமாங்க நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை கூட சிலருக்கு கிடைக்காமல் உள்ளது என நினைவில் கொண்டு நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கைக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் நன்றி சொல்வோம். கால் இல்லாதவர்கள் கை உள்ளதே என்று நன்றி சொல்லுங்கள், கண் இல்லாதவர்கள் அடடே நமக்கு கேட்பதற்கு காது இருக்கிறது என நன்றி சொல்லுங்கள்.
இருவேளை உணவு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை நமக்கு ஒரு வேலையாவது உணவு கிடைக்கிறதே என்று நன்றி சொல்லுங்கள். இவ்வாறு நீங்கள் நன்றி சொல்ல சொல்ல இந்தப் பிரபஞ்சம் மகிழ்ந்து ஒரு நாள் நிச்சயம் பல மடங்கு நன்மையை அள்ளித் தரும் என்பதே இயற்கையின் விதி ஆகும்.
நன்றி சொல்வது என்றால் அது ஒரு வார்த்தை இல்லை நாம் மனதார உணர்ந்து மகிழ்ச்சியோடு நன்றி கூற வேண்டும். ஒருவர் மீது நமக்கு கோபம் ஏற்பட்டால் நாம் மனதார அவர் மீது அந்த கோபத்தை வெளிக்காட்டுவோம். அதுபோல் நன்றியையும் மனதார மகிழ்ச்சியோடு இந்த பிரபஞ்சத்திற்கு வெளிக்காட்ட வேண்டும்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…