அடடே .! குழாய் புட்டு மேக்கர் இல்லாமலே குழாய் புட்டு செய்யலாமா?

kula puttu

குழாய் புட்டு – குழாய்  புட்டு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி மாவு =250 கிராம்
  • நெய் =2 ஸ்பூன்
  • நாட்டு சர்க்கரை =தேவையான அளவு
  • தேங்காய் =அரைமூடி [துருவியது ]
  • ஏலக்காய் =கால் ஸ்பூன்  ஸ்பூன்

செய்முறை:

மாவை சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து புட்டு போல கலந்து கொள்ளவும். பிறகு அதை இட்லி பாத்திரத்தில் துணியை நனைத்து அதன் மீது மாவை சேர்த்து மேலே ஒரு துணியை போட்டு மூடி 15 நிமிடம் வேக வைக்கவும்.

வெந்த பிறகு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும் .பிறகு முறுக்கு பிழியும் கட்டையில் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் ,இரண்டு  ஸ்பூன் அவித்து வைத்துள்ள மாவு, இரண்டு ஸ்பூன் நாட்டு சக்கரை சேர்க்கவும் .

இதுபோல் அந்த முறுக்கு கட்டை நிரம்பும்  வரை அடுக்கடுக்காக சேர்த்து கொள்ளவும் .மாவு வைக்கும் போது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. முறுக்கு கட்டைக்கு கீழ் ஒரு தட்டை வைத்து பிறகு இவ்வாறு செய்து கொள்ளவும்.

பிறகு அந்த மாவை முறுக்கு பிடியை வைத்து மெது மெதுவாக ஒரு அகலமான தட்டில் தள்ளி விடவும். இப்போது சூப்பரான குழாய் புட்டு தயார். முறுக்கு கட்டைக்கு பதில் நீங்கள் வாட்டர் பாட்டிலை இருபுறமும் சமமாக நறுக்கி , இது போல் மாவை நிரப்பி  செய்யலாம். அல்லது ஒரு பெரிய டம்ளரில் வைத்தும் செய்யலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்