அடடே.. இட்லி மாவை வைத்து கூட பஜ்ஜி செய்யலாமா?. அது எப்படிங்க..!

மழைக்கு சூடா சுடச்சுட பஜ்ஜி   சாப்பிடனுமா? வாங்க சட்டுனு பஜ்ஜி  செய்வது எப்படின்னு பார்க்கலாம்..

bajji (1)

சென்னை :மழைக்கு சூடா சுடச்சுட பஜ்ஜி   சாப்பிடனுமா? வாங்க சட்டுனு பஜ்ஜி  செய்வது எப்படின்னு பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்;

  • வாழைக்காய்= மூன்று
  • தண்ணீர்= 100ml
  • உப்பு =அரை ஸ்பூன்
  • பெருங்காயம் =அரை ஸ்பூன்
  • சோடா உப்பு = கால் ஸ்பூன்
  • மிளகாய் தூள் =இரண்டு ஸ்பூன்
  • எண்ணெய் =தேவையான அளவு
  • இட்லி மாவு= ஒரு கப்
  • கடலை மாவு= 300 கிராம்

valaikkai (1)

செய்முறை;

முதலில் வாழக்காயை இருபுறமும் காம்புகளை  நீக்கி விட்டு  அதனுடைய மேல் தோலை  நீக்கி சிறிது சிறிதாக சீவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 100 எம்எல் தண்ணீர் ஊற்றி அதில்  எடுத்து வைத்துள்ள உப்பு ,பெருங்காயம், சோடா உப்பு  ,மிளகாய்த்தூள் ஆகியவற்றை  சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் . பிறகு ஒரு குழி  கரண்டி எண்ணெயை சூடாக்கி கலந்து வைத்துள்ள கலவையில் சேர்த்து  மீண்டும் கலந்து கொள்ளவும்.

idli maavu (1)

பிறகு கடலை மாவையும் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம். இதன் பிறகு 1 கப்  இட்லி மாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்கு காய வைத்துக் கொள்ளவும்.  எண்ணெய் காய்ந்த உடன்  சீவி வைத்துள்ள வாழக்காயை பஜ்ஜி மாவில் தடவி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுடச்சுட பஜ்ஜி  தயாராகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்