அடடே! கொள்ளு பயிரில் வடை செய்யலாமா?.. இது தெரியாம போச்சே.!

kollu vadai

கொள்ளு பயிரை வைத்து ரசம், குழம்பு, சட்னி என பல வகைகளில் ருசித்திருப்போம். இன்று கொள்ளு பயிறு வடை எவ்வாறு செய்வது என்பது பற்றி  இப் பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • கொள்ளு =400 கிராம்
  • இஞ்சி =2 இன்ச்
  • பூண்டு =15 பள்ளு
  • சோம்பு =1 ஸ்பூன்
  • பட்டை =1
  • பெருங்காயத்தூள் =1 ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் =150 கிராம்
  • கருவேப்பிலை தேவையானவை
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் பொறிக்க தேவையான அளவு

செய்முறை
கொள்ளு பயிரை நன்றாக கழுவி காய்ந்த மிளகாய் 4 சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். ஊற வைக்க தேவையில்லை. தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அரைக்க வேண்டும். பாதி அரைத்த பிறகு அதிலே பூண்டு ,இஞ்சி ,கருவேப்பிலை, சோம்பு ,பட்டை ,பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து அரைக்கவும் சிறிது நேரம் கழித்து சின்ன வெங்காயத்தையும் சேர்த்து அரைக்கவும். வெங்காயம் லேசாக அரை பட்டாலே போதுமானது.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதிலே பால் பணியார உருண்டை போல் சிறிய சிறிய உருண்டைகளாக போட்டு எடுக்கவும் இப்போது சத்தான ருசியான கொள்ளு வடை ரெடி.

பயன்கள்
இளைத்தவனுக்கு  எள்ளை  கொடு கொடுத்தவனுக்கு கொள்ளை கொடு என கூறுவார்கள். ஒருவர் உடல் எடை அதிகமாக இருந்தால் கொள்ளு பயிரை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொள்ளலாம் கொள்ளு கொழுப்பை குறைக்கும்.

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் எண்ணெய் சேர்க்காமல் அவித்து உப்பு மட்டுமே சேர்த்து அல்லது முளைக்கட்டியும் எடுத்துக் கொள்ளலாம்.

உடலுக்கு நல்ல பலத்தை  கொடுக்கக் கூடியது அதனால்தான் குதிரையின் பிரதான உணவாக கொள்ளு திகழ்கிறது.

சுவாசக் கோளாறு
சளி, இருமல் ,காய்ச்சல் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு கொள்ளை ரசமாக வைத்து கொடுக்கலாம்.

சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையும் கொண்டுள்ளது. கொள்ளு பயிரை அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே கொள்ளு பயிரை தனியாக செய்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் இவ்வாறு பலகாரங்கள் போல் வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுத்தால் விரும்பி உண்ணுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்