அடடே.! பீட்ரூட்டை வைத்து ரசம் கூட செய்யலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
பீட்ரூட் ரசம் -பீட்ரூட் ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
பீட்ரூட்டை ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் தினமும் சேர்த்து கொண்டோம் என்றால் ரத்த சோகை வராமல் பாதுகாத்து கொள்ளலாம் .உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும் .இதை ரசம் செய்து கொடுக்கும் போது கலர்புல்லான ரசத்தை குழந்தைகளும் விரும்பு சாப்பிடுவார்கள் .
தேவையான பொருள்கள்:
- பீட்ரூட் =1
- மிளகு =அரை ஸ்பூன்
- சீரகம் =1 ஸ்பூன்
- சோம்பு =1 ஸ்பூன்
- பூண்டு =10 பள்ளு
- எண்ணெய் =3 ஸ்பூன்
- புளி =எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- தக்காளி =2
- காய்த்த மிளகாய் =1
- பச்சை மிளகாய் =2
- கொத்தமல்லி இலை ,கருவேப்பிலை =சிறிதளவு
செய்முறை :
பீட்ரூட்டை நறுக்கி மிக்ஸியில் அரைத்து அதன் சாரை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு சீரகம் ,மிளகு, சோம்பு, வரமிளகாய் ஒன்று சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக முதலில் அரைத்து, பிறகு அதிலே தக்காளி,பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதுகளையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும்.
பின்பு சிறிதளவு மஞ்சள் தூள், புளி கரைசல் மற்றும் பீட்ரூட் சாறையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பும் சேர்த்து கலந்து விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி மூடி வைத்து விடவும் .இந்த ரசம் நுரை கட்டியவுடன் இறக்கினால் கலர்ஃபுல்லான பீட்ரூட் ரசம் தயாராகிவிடும்.