அடடே! பப்பாளிப்பழத்தில் இவ்வளவு சத்துக்களா?இது தெரிஞ்சா தூக்கி போட மாட்டிங்க!

PapayaFruit

நம் கண்ணோட்டத்தில் மிகவும் குறைவாக மதிப்பிடக்கூடிய ஒரு பழம் பப்பாளி பழம். இந்த பப்பாளி பழம் நிறைய நோய்களை தடுக்கக்கூடியது அதுமட்டுமில்லாமல் நிறைய நோய்களுக்கு மருந்தாகவும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பப்பாளி பழத்தை நாம் எப்படி சாப்பிட வேண்டும் யாரெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் வாசிப்போம்.

பப்பாளி பழம் எளிதில் கிடைப்பதால் அனைவராலும் உதாசனப்படுத்த படுகிறது. ஆமாங்க ஒரு பொருள் நிறைய கிடைத்தால் அதுவும் உள்ளூரிலே கிடைத்தால் நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் ஒரு பொருள் வெளியிலிருந்து வருகிறது கிடைப்பது கடினம் மற்றும் அதில் பெரிதாக எந்த சத்துக்களும் இல்லை என்றாலும் கூட அதை நாம் அதிக விலை கொடுத்து வாங்குவோம்.

பப்பாளி பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:

விட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் மிக மிக அதிகம். மேலும் விட்டமின் ஈ, விட்டமின் கே, கால்சியம் கெராட்டினாய்ட்ஸ், நார்ச்சத்து போன்றவைகளும் நிறைந்துள்ளது.

பயன்கள்:

நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழமாகும். குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். ஒரு துண்டுகள் போதுமானதாகும்.

வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் கண்ணுக்கு மிகவும் நல்லது. கண் கூச்சம், கண் எரிச்சல்,கண் வறட்சி, சிறுவயதில் ஏற்படும் பார்வை குறைபாடு போன்றவற்றை தடுக்கும்.வாரத்திற்கு மூன்று நாட்கள் எடுத்து வரலாம்.

நல்ல ஜீரண சக்தியை கொடுக்கக்கூடிய பழமாகும். விதையுள்ள பப்பாளியை எடுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.

மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் அரை பழமாக இருக்கும் போது சாப்பிட்டு வந்தால் குணமாகும். குறிப்பாக குறைவான இரத்தப்போக்கு உள்ளவர்கள் சாப்பிட்டு வரவும்.

உடல் எடை குறைப்பவர்கள் இந்த பழத்தை ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்கள் 5 மாதத்திற்கு பிறகு ஒரு பீஸ் அளவு எடுத்துக் கொள்ளலாம். அதுவும் பல சாலட்டுடன் சேர்த்து தான் உண்ண வேண்டும்.

ஒரு வாரம் தொடர்ந்து பப்பாளி பழத்தை நம் சருமத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பாகும். அழகு அதிகரிக்கும். முகத்திற்கு நல்ல ஒரு பொலிவைத் தரும்.

விட்டமின் சி அதிகம் நிறைந்திருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.

தவிர்க்க வேண்டியவர்கள்:

பப்பாளி பழத்தில் நிறைய நன்மைகள் இருந்தாலும் இது உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு அலர்ஜியையும் ஏற்படுத்தும். குறிப்பாக அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிட வேண்டாம். பப்பாளி பழம் சாப்பிட்டபின் மருந்துகள் எடுப்பதை தவிர்க்கவும்.

குறிப்பாக பப்பாளியின் தோலை சாப்பிடக்கூடாது அது பல வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள் முதல் 5 மாதம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்