அடடே.!இனிமே முட்டை பப்ஸ் வீட்டிலேயே ஈஸியா செய்யலாமா?

Published by
K Palaniammal

முட்டையை வைத்து நாம் பல ரெசிபிகள் செய்திருந்தாலும் முட்டை பப்ஸ் என்றால் கடைகளில் தான் வாங்கி ருசித்து இருப்போம் ஆனால் வீட்டிலேயே மிக சுலபமாக செய்யலாம் அது எப்படின்னு இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்:

  • முட்டை =2
  • மைதா =300கிராம்
  • பெரிய வெங்காயம் =2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் =1ஸ்பூன்
  • சோம்பு =1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் =1/2 ஸ்பூன்
  • மல்லித்தூள் =1/2 ஸ்பூன்
  • கரம் மசாலா =1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன்
  • எண்ணெய் =தேவையான அளவு
  • உப்பு சிறிதளவு

செய்முறை:

மைதா மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிறகு அந்த மாவை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மேலே தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும், இவ்வாறு செய்யும் போது மாவு காயாமல் இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடவும் ,அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள் ஆகியவற்றையும் சேர்த்து எண்ணெய்  பிரியும் வரை வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு முட்டைகளை வேகவைத்து எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஊற வைத்துள்ள மாவை நான்கு உருண்டைகளாக பிரித்து அதை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ளவும் .பிறகு ஒரு உருண்டையில் தேய்த்த மாவின் மீது சிறிதளவு மாவு தூவி அதன் மீது மற்றொடு தேய்த்த   மாவை வைத்து  மேலே நெய் அல்லது வெண்ணையை தடவிக் கொள்ளவும் அதன் மீதும் மற்றொரு பகுதியை சேர்த்து மேலே சிறிதளவு மாவு தூவி அதன் மீது நெய் சேர்த்து தடவிக் கொள்ளவும் இவ்வாறு நான்கையும் சேர்த்து நெய் சேர்த்து தடவி அதை நான்கு பகுதிகளாக பிரித்து ஒவ்வொன்றையும் சதுர வாக்கில் தேய்த்து எடுத்து வைக்கவும்.

இப்போது நாம்  செய்து வைத்துள்ள வெங்காய மசாலாவை தேய்த்து வைத்துள்ள மாவில் வைத்து அதன் மீது அறை பகுதி முட்டையை வைத்து மசாலா தெரியாதவாறு மூடிக்கொள்ளவும் இவ்வாறு நான்கு பப்ஸ்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதிலே நாம் எடுத்து வைத்துள்ள பப்சை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். இப்போது சுவையான மொறு மொறுவென முட்டை பப்ஸ் ரெடி.

இந்த மாதிரி வீட்டிலேயே நாம் சுகாதாரமான முறையில் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago