பிறரிடம் பேச தெரியவில்லையா.? இந்த பதிவு உங்களுக்கானது தான்.!

Communication Skills

Communication : தற்போதைய காலகட்டத்தில் நமது மொபைல் போன் நமது இன்னொரு உயிரில்லா உறவு போல நம்முடன் ஒட்டிக்கொண்டு வளர்ந்துவிட்டது.  இதனால், தற்போது நான் ஒரு Introvert (யாரிடமும் பேச தெரியாமல், விரும்பாமல் இருப்பது) என பலர் கூறும் நிலைமை வந்துவிட்டது. ஆனால், அதுவே நமது வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும் இருக்கிறது என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை.

ஏன் பிறரிடம பேச வேண்டும்.?

நீங்கள் அதிபுத்திசாலி என நினைக்கும் பலருக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்து இருக்கபோவதில்லை. அவர்களிடம் இந்த திறன்கள் நிச்சயம் இருக்கும், அது தனக்கு தெரியாத ஒன்றை கூச்சப்படாமல் மற்றவர்களிடம் கேட்டு கற்றுக்கொள்ளும் திறன், தனக்கு தெரிந்த விஷயத்தை அனைவருக்கும் சரியாக புரியும்படி கூறும் திறன்.

நம் வாழ்வில் நமக்கு தெரியாததை தெரிந்து கொள்ள, நமக்கு தெரிந்தவற்றை அனைவரிடமும் சரியாக எடுத்து கூற , அனைவரும், நம் பேச்சை கவனிக்க இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

How to win Friends and Influence People  எனும் புத்தகத்தில், எழுத்தாளர் டேல் கார்னிகி (Dale Carnegie) மற்றவர்களிடம் எளிதாக பேச இரண்டு எளிய வழிகளை சுருக்கி கூறியுள்ளார்.

ஒருவரிடம் உண்மையாக இருப்பது

ஒருவரிடம் உண்மையாக இருப்பது என்றால், அவர்களுக்காக எதனையும் செய்வது, அல்லது வேறு ஏதேனும் அர்த்தம் இல்லை. பெரும்பாலும், நாம் மற்றவர்களிடம் பேசும்போது, நமது கதையை மட்டும் அவர்களிடம் கூறாமல் அவர்களின் எண்ணங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.அவர்கள் பேச்சையும் கேட்டு அதற்கான கருத்துக்களை கூற வேண்டும். இதனை கூறினால் என்னவாகுமோ என நினைக்காமல், அதனை கூறி, அதில் தவறு இருந்தால் அடுத்த முறை திருத்திக்கொள்ள வேண்டும்.

சிரிப்பு :

இது சாதாரணமான ஒரு விஷயம் தான். நாம் கோபமாக, வருத்தமாக இருந்தால் கூட, மற்றவர்களை நாம் பார்க்கும் போது சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்பது. மற்றவர்கள் நம்மை விரும்புவதற்கு பெரிதும் உதவும்.

நன்றாக சிரித்து மகிழ்வாக பாடம் எடுக்கும் ஆசிரியர் தான் சிறந்த ஆசிரியராக இருப்பார்கள் என்றும், நன்றாக மற்றவர்களிடம் சிரித்து பேசும் நபர் தான் சிறந்த விற்பனையாளராக இருப்பார்கள் என்றும் உளவியல் ஆய்வு ரீதியில் நிரூபணமாகியுள்ளது.

மேற்கண்ட இரண்டு எளிய வழிமுறைகளை முதலில் பின்பற்றி உங்கள் நட்பு வட்டாரத்தை சுற்றுப்புறத்திலும், வேலை பார்க்கும் இடத்திலும் பெரிதாக்கி கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்