சளி தொல்லையா? கவலையை விடுங்க! இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்!
சளி தொல்லையில் இருந்து விடுபட டிப்ஸ்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பருவநிலை மாற்றம் காரணமாக, மழைக்காலங்களில் சளி தொல்லை ஏற்படுவது வழக்கம் தான். இதனால், நாம் நமது பணத்தை செலவு செய்து மருத்துவமனைகளில், இதற்காக சிகிச்சை பெறுவதுண்டு.
தற்போது இந்த பதிவில், சளிபிரச்சனையில் இருந்து விடுபட, இயற்கையான முறையில் என்னென்ன செய்யலாம் என பார்ப்போம்.
வாய் கொப்பளித்தல்
சளி பிரச்னை உள்ளவர்கள், வெதுவெதுப்பான நீரில், உப்பு சேர்த்து கொப்பளிக்க வேண்டும். இது தொண்டை புண்ணை ஆற்ற உதவுவதோடு, சளியை வெளியேற்றிவிடும்.
தேநீர்
நம்மில் பலரும் தேநீரை விரும்பி குடிப்பதுண்டு. அந்த வகையில், சளி பிரச்னை உள்ளவர்கள் தேநீர் தயாரிக்கும் போது, சில துளசி இலைகள் மற்றும் நறுக்கிய இஞ்சியுடன் கருமிளகையும் சேர்த்து தயாரித்து, தேநீர் இருந்து விடுபடலாம்.
மஞ்சள் தூள்
வெதுவெதுப்பான நீரில், மஞ்சள் தூள், இஞ்சி தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்தால், சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம் அளிப்பதோடு, உடல் வலியையும் போக்குகிறது.
ஆவி பிடித்தல்
சளி பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆவி பிடித்தல் ஒரு சிறந்த நிவாரணம் ஆகும். நாம் உடனடி நிவாரணம் பெற, சுடுநீரில் யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து ஆவி பிடிக்கலாம்.