கருப்பா இருக்கீங்களா? அப்போ இந்த பவுடரைப் பயன்படுத்தி கலரா மாறுங்க!

Published by
Edison

நாம் எப்பொதும் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது.ஏனெனில்,எல்லோருமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் ரொம்ப ஆசைபடுகிறார்கள்.அதன் காரணமாகவே அழகு நிலையங்களுக்கு செல்கின்றனர்.ஆனால்,இயற்கையான முறையில் வீட்டில் இருந்த படியே  உடலை அழகாக மற்றும் கலராக எப்படி மாற்றுவது என்பது குறித்து காண்போம்.

காபி என்றாலே எப்பொதும் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.இருப்பினும்,காப்பியானது உடல்ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடலை இளமையாகவும், கலராகவும் மாற்றவும் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்:

  • காபி பவுடர்
  • தேன்
  • ஆலிவ் எண்ணெய்

பயன்கள்:

  • காபி பவுடர் : ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்தது.இது சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.மேலும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை கட்டுப்படுத்துகிறது மற்றும் இறந்த செல்களை வெளியேற்றுகிறது.
  • தேன்: இதில் உடலுக்குத் தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளன.எனினும் உடல் அழகை மேம்படுத்துவதிலும் தேனின் பங்கு இன்றியமையாதது. தேனிலும் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளதால் என்றும் உடலுக்கு இளமையை தருகிறது.
  • ஆலிவ் எண்ணெய்: இதில் ஆன்டி-ஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால் திரவ தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.இது சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது.

    செய்முறை:

  • காபி பவுடர் 2tsp + தேன் 2tsp அல்லது காபி பவுடர் 2tsp + ஆலிவ் எண்ணெய் 2tsp இதில் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு முறைகளில் பொருட்களை ஒன்றாக கலந்து உடல் கருமையாக உள்ள இடங்களிலும் மேலும் நீங்கள் உடலில் கலராக வேண்டும் என்று நினைக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
  • வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இவ்வாறு செய்வதால் உடலில் கருமை குறைந்து பளபளப்பாகவும்,கலராகவும் மாறிவிடும்.

 

Published by
Edison

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago