காபி பிரியர்களே..பில்டர் இல்லாமலே பில்டர் காபி போடலாமாம்.. அது எப்படிங்க..?
Filter coffee-பில்டர் இல்லாமல் ஃபில்டர் காபி செய்யும் முறையை பற்றி இந்த பதிவில் அறியலாம்.
காபி என்றாலே அதற்கு ஏராளமான பிரியர்கள் உள்ளனர். அதிலும் பில்டர் காபி என்றால் சொல்லவே வேண்டாம் அதன் சுவைக்கு பலரும் அடிமை. ஆனால் இந்த பில்டர் காபியை இன்ஸ்டன்ட் காஃபி போடுவது போல் சுலபமாக போட்டுவிட முடியாது. இந்த பதிவில் மூலம் பில்டர் காப்பியை சுலபமாக நீங்கள் தயாரித்து அருந்தலாம்.
தேவையான பொருட்கள்;
- பால் =250 எம்எல்
- தண்ணீர் =150 எம்எல்
- காபி பொடி 50 கிராம்
- சர்க்கரை தேவையான அளவு
செய்முறை;
காபி பொடியில் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு 150ml தண்ணீரைக் கொதிக்க வைத்து காபி தூளில் ஊற்றி கலந்து கொள்ளவும். பின்பு அதை ஐந்திலிருந்து பத்து நிமிடம் வைத்து விடவும். பத்து நிமிடம் கழித்து எடுத்துப் பார்த்தால் டிகாஷன் மேலேயும் காபி பொடி கீழேயும் படிந்திருக்கும். அதில் டிகாஷனை மற்றும் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அந்த டிகாஷனில் சூடு இல்லை என்றால் நேரடியாக ஒரு பாத்திரத்தில் சூடு செய்யாமல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை உள்ளே வைத்து விடவும். இந்த முறையை பின்பற்றும்போது தான் பில்டர் காபியின் சுவை மாறாமல் இருக்கும். இப்போது பாலை காய்ச்சி கொள்ளவும். ஒரு டம்ளரில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் பால் ,டிகாஷன் சேர்த்து கலந்து ஆற்றினால் நாவில் சுவையூறும் பில்டர் காபி ரெடி.[ 100 எம்எல் பாலுக்கு இரண்டு லிருந்து 3 ஸ்பூன் டிகாஷன் சேர்த்துக் கொள்ளலாம்].