ப்ரோக்கோலியின் சத்துக்கள் அப்படியே கிடைக்க இதுபோல செஞ்சு கொடுங்க..!

Published by
K Palaniammal

Broccoli recipe-ப்ரோக்கோலி முட்டை பொரியல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • ப்ரோக்கோலி =1
  • முட்டை =3
  • இஞ்சி =அரை துண்டு
  • பூண்டு =5 பள்ளு
  • பெரிய வெங்காயம் =2
  • பச்சைமிளகாய் =2
  • சோம்பு=1 ஸ்பூன்
  • மல்லித்தூள் =1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் =அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் =கால் ஸ்பூன்
  • எண்ணெய் =4 ஸ்பூன்

செய்முறை

முதலில் ப்ரோக்கோலியை  சிறிது சிறிதாக நறுக்கி சுடு தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்க்கவும்.பிறகு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து  பெரிய வெங்காயம் சேர்க்கவும் .

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு இஞ்சி பூண்டை தட்டி சேர்க்கவும் . பின்பு ப்ரோக்கோலியை சேர்த்து சிறிதளவு உப்பு  மல்லித்தூள், மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ஆகியவற்றையும்சேர்த்து கிளறி விடவும்.

ஒரு மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும் இடையிடையே கிளறி விட வேண்டும். ப்ரோ கோழி வெந்த பிறகு மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் சத்தான சுவையான ப்ரோக்கோலி முட்டை  பொரியல்  தயாராகிவிடும்.

  • ப்ரோக்கோலியில் நாம் முட்டை சேர்த்து  செய்வதால் ப்ரோக்கோலியில் உள்ள  கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் கரைந்து நம் உடலுக்கு அதன் சத்துக்கள் செல்லும்.
  • ஏனெனில் ,பொதுவாக முட்டை கொழுப்பு சத்து நிறைந்தது .காய்கறிகளில் அதிக விட்டமின் சத்துக்கள் இருக்கும். கொழுப்பு சத்து நிறைந்த முட்டையை ஊற்றுவதால் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் கரைந்து விடும்.மேலும் தைராயிடு உள்ளவர்கள் ப்ரோக்கோலி சாப்பிடுவதை தவிர்க்கவும் .

Recent Posts

இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!

ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…

6 minutes ago

பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?

பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…

37 minutes ago

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

8 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

10 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

10 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

11 hours ago