ப்ரோக்கோலியின் சத்துக்கள் அப்படியே கிடைக்க இதுபோல செஞ்சு கொடுங்க..!

Broccoli recipe-ப்ரோக்கோலி முட்டை பொரியல் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- ப்ரோக்கோலி =1
- முட்டை =3
- இஞ்சி =அரை துண்டு
- பூண்டு =5 பள்ளு
- பெரிய வெங்காயம் =2
- பச்சைமிளகாய் =2
- சோம்பு=1 ஸ்பூன்
- மல்லித்தூள் =1 ஸ்பூன்
- மிளகாய் தூள் =அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் =கால் ஸ்பூன்
- எண்ணெய் =4 ஸ்பூன்
செய்முறை
முதலில் ப்ரோக்கோலியை சிறிது சிறிதாக நறுக்கி சுடு தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சேர்க்கவும்.பிறகு பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளித்து பெரிய வெங்காயம் சேர்க்கவும் .
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு இஞ்சி பூண்டை தட்டி சேர்க்கவும் . பின்பு ப்ரோக்கோலியை சேர்த்து சிறிதளவு உப்பு மல்லித்தூள், மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ஆகியவற்றையும்சேர்த்து கிளறி விடவும்.
ஒரு மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும் இடையிடையே கிளறி விட வேண்டும். ப்ரோ கோழி வெந்த பிறகு மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் சத்தான சுவையான ப்ரோக்கோலி முட்டை பொரியல் தயாராகிவிடும்.
- ப்ரோக்கோலியில் நாம் முட்டை சேர்த்து செய்வதால் ப்ரோக்கோலியில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் கரைந்து நம் உடலுக்கு அதன் சத்துக்கள் செல்லும்.
- ஏனெனில் ,பொதுவாக முட்டை கொழுப்பு சத்து நிறைந்தது .காய்கறிகளில் அதிக விட்டமின் சத்துக்கள் இருக்கும். கொழுப்பு சத்து நிறைந்த முட்டையை ஊற்றுவதால் கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் கரைந்து விடும்.மேலும் தைராயிடு உள்ளவர்கள் ப்ரோக்கோலி சாப்பிடுவதை தவிர்க்கவும் .
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025