Chicken Donut : சிக்கனில் அசத்தலான வடை செய்வது எப்படி…?
நம் அனைவருக்குமே சிக்கன் என்றாலே மிகவும் பிடித்தமான உணவு தான். சிக்கனை வைத்து சாலட்கள், சூப்கள், பொரியல்கள், ஸ்டூக்கள் மற்றும் பிற உணவுகளை செய்வதுண்டு. அந்த வகையில் சிக்கனை வைத்தே, வித்தியாசமான முறையில் குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் டோனட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சிக்கன் சதைகள் – அரை கிலோ
- பிரட் – 3
- மல்லி தழை – 3 கொத்து
- வெங்காயம் – 1 நறுக்கியது
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மிளகு தூள் – அரை ஸ்பூன்
- பால் – அரை கப்
- பச்சை மிளகாய் – 2
- ரஸ்க் – 2
- முட்டை -1
- உப்பு – தேவையான அளவு
Chicken Donut செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் கழுவி வைத்துள்ள சிக்கன் சதைகள், பிரட், மல்லித்தழை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்து, அதனை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து ஒரு மணி நேரம் முடிவைத்து விட வேண்டும்.
பின்பு இன்னொரு பவுலில் பால், முட்டை, மிளகு தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ரிஸ்க்கை தூளாக்கி ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை கொதிக்க விட்டு தயார் செய்து வைத்துள்ள சிக்கன் சதைகளை வைத்து உளுந்து வடைக்கு தட்டுவது போல தட்டையாக தட்டி அதன் நடுவில் ஓட்டை போட்டு அதனை முட்டை கலவையினுள் போட்டு, பின்பு ரஸ்க் தூளில் துவைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான சிக்கன்டோனட் தயார்.
தினமும் நாம் சிக்கனை வைத்து ஒரே விதமான உணவே செய்யாமல் இவ்வாறு வித்தியாசமான முறையில் உணவு செய்து கொடுத்தால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.