வடகறி -வடகறி செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.
கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து அதில் உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை இட்லி வேக வைக்கும் தட்டில் வடை போன்று தட்டி பத்து நிமிடம் வேக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் ,பச்சை மிளகாய்,பூண்டு 4,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும் .
தக்காளி அரைக்கும் போது ஒரு துண்டு பட்டை, ஒரு ஸ்பூன்சோம்பு, கிராம்பு , இரண்டு ஏலக்காய், இஞ்சி ஒரு துண்டு, பூண்டு 4 பள்ளு சேர்த்து அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும்.
பிறகு அதில் கரம் மசாலா, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி விடவும் ,அதன் பச்சை வாசனை போன பிறகு 600 ml தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
பிறகு நம் வேக வைத்துள்ள கடலைப்பருப்பை உதிர்த்து அதிலே சேர்த்துக் கொள்ளவும், அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் வடகறி தயாராகிவிடும்.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…