சிக்கன் குழம்பு இந்த ஸ்டைல செஞ்சு பாருங்க.. டேஸ்ட்டா இருக்கும்.!
chicken recipe-சிக்கன் குழம்பு வித்தியாசமான முறையில் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- சோம்பு =1 ஸ்பூன்
- மிளகு =5
- கிராம்பு =3
- பட்டை =2 துண்டு
- அண்ணாச்சி பூ =1
- துருவிய தேங்காய் =அரை மூடி
- எண்ணெய் =6 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன்
- தக்காளி =2
- பெரிய வெங்காயம் =2
- சின்ன வெங்காயம் =3
- மிளகாய் தூள் =2 ஸ்பூன்
- மல்லித்தூள் =4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =1 ஸ்பூன்
- சிக்கன் =1/2 கிலோ
செய்முறை:
முதலில் மசாலாவை தயார் செய்து கொள்ள வேண்டும். மிளகு, சோம்பு பட்டை, கிராம்பு ,அண்ணாச்சி பூ மற்றும் தேங்காய் சேர்த்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
தேங்காயின் நிறம் மாறும் வரை வதக்கி, ஆறவைத்து அதில் 3 சின்ன வெங்காயம் சேர்த்து மல்லித்தூள், மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இப்போது மற்றொரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்த பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்க்கவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு ஒரு கொதி விடவும் .
கொதி வந்தவுடன் சிக்கனை சேர்த்து கலந்து விட்டு மூடி வேக வைக்க வேண்டும் . சிக்கன் வேக 20- 25 நிமிடம் எடுத்துக் கொள்ளும். இடையிடையே கிளறி விடவும். இப்போது சிக்கன் வெந்து குழம்பில் எண்ணெய் பிரிந்து வந்திருக்கும், சுவையான நாவில் சுவையூரும் சிக்கன் குழம்பு தயார்.