கோதுமை மாவில் குலோப் ஜாமுனா? இந்த தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க!

Gulab Jamun

தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு ,பலகாரம் இல்லாமல் எப்புடிங்க ..அதான் இந்த தீபாவளிக்கு ஒரு வித்தியாசமான முறையில் கோதுமை மாவில் குலோப் ஜாமுன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு= ஒரு கப்
காய்ச்சியபால்= தேவையான அளவு
உப்பு= அரை ஸ்பூன்
பேக்கிங் சோடா= அரை ஸ்பூன்
நெய்= ஐந்து ஸ்பூன்
சர்க்கரை= இரண்டு கப்
தண்ணீர்= மூன்று கப்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் நெய் ஊற்றி கோதுமை மாவை நன்றாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதில் உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து காய்ச்சிய பாலை ஊற்றி பிசைய வேண்டும். பிசைந்த  மாவை 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அந்த மாவு காய்ந்து இருந்தால் மீண்டும் பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும் அதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொண்டால் கையில் ஒட்டாமல் இருக்கும்.

உருண்டை உருட்டி வைக்கும் தட்டிலும் எண்ணெய்  தடவி விட்டு கையிலும் சிறிது எண்ணெய்  தடவிக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி உருட்டிய உருண்டைகளை பொரித்து எடுக்கவும். மற்றொரு பக்கம் சர்க்கரை பாகு ரெடி பண்ணி அதிலே பொரித்த உருண்டைகளை சேர்க்கவும். பாகு சூடாக இருக்கும்போதே உருண்டைகளை சேர்த்தால் நன்கு சாப்ட்டாக  இருக்கும். அதை நான்கு மணி நேரம் ஊற வைத்தால் தித்திப்பான குலோப் ஜாமுன் ரெடி.

பிஸ்கட்டை தினமும் நீங்க இந்த மாதிரி சாப்பிட்டா இவ்வளவு ஆபத்தா?..

இதில் நாம் கோதுமை சேர்த்து செய்துள்ளதால் குழந்தைகளுக்கு எந்த பயமும் இன்றி கொடுக்கலாம். கோதுமைகளின் நிறைய நார் சத்தும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. வயிற்றுக் கடுப்பு மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இந்த பாகில் ஊறவைத்த குலோப் ஜாமினை எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும். குலோப் ஜாமினை நாம் கோதுமை மாவில் செய்துள்ளதால் இது உடலுக்கு ஆரோக்கியமானதாக  இருக்கும் . வீட்டிலேயே தயார் செய்த கோதுமை என்றால் இன்னும் சிறப்பு. ஆகவே இந்த தீபாவளியை நாம் கோதுமை குலோப்ஜாமோடு  கொண்டாடி மகிழ்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்