கேரட்டில் சட்னி செய்ய முடியுமா? பார்க்கலாம் வாருங்கள்!
கேரட் பெரும்பாலும் சாம்பார் மற்றும் கூட்டு செய்வதற்காகவும் தான் நாம் அதிகம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அந்த கேரட்டிலேயே அட்டகாசமான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- துருவிய கேரட்
- துருவிய தேங்காய்
- கொத்தமல்லி
- வறுத்த வேர்க்கடலை
- பூண்டு
- எண்ணெய்
- வர மிளகாய்
- கடுகு
- உப்பு
செய்முறை
முதலில் கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், கொத்தமல்லி ஆகிய இரண்டையும் நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே கடாயில் கேரட்டை நன்றாக துருவி சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஏற்கனவே வறுத்து வைத்துள்ள வரமிளகாய் கொத்தமல்லி மற்றும் கேரட் ஆகியவற்றுடன் துருவிய தேங்காய், பூண்டு, வறுத்த வேர்க்கடலை, உப்பு ஆகியவை சேர்த்து லேசான கர கரப்பு தன்மையுடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை சேர்த்து தாளித்து எடுக்கவும். அதை அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டிக் கிளறினால் அட்டகாசமான கேரட் சட்னி வீட்டிலேயே தயார்.