கேரளத்து சுவையில் சூப்பரான அவியல் செய்யலாமா?
Aviyal recipe -கேரளாவின் பாரம்பரிய உணவான அவியலை எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- தேங்காய் எண்ணெய்= 5 ஸ்பூன்
- தேங்காய்= அரை மூடி
- பச்சை மிளகாய் =மூன்று
- பூண்டு =10 பள்ளு
- சின்ன வெங்காயம் =ஆறு
- பச்சை மிளகாய் =3
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- முருங்கைக்காய்= 2
- வாழைக்காய்= ஒன்று
- கேரட் =ஒன்று
- சேனைக்கிழங்கு= ஒன்று [சிறியது ]
- கத்திரிக்காய்=3 மூன்று
- பீன்ஸ் =ஆறு
- புடலங்காய் =ஒன்று
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- தயிர் =3 ஸ்பூன்
செய்முறை:
முதலில் காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அந்த காய்கறிகளை சேர்த்து அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
இப்போது மிக்ஸியில் தேங்காய் ,பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சீரகம் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்போது காய்கறி வெந்ததும் இந்த அரைத்த விழுதை அதில் சேர்த்து கலந்து விடவும்.
அதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து விட்டு இரண்டு நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். இரண்டு நிமிடம் கழித்து 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால் அவியல் தயாராகிவிடும்.