கரும்பை வைத்து அல்வா செய்யலாமா? அது எப்படிங்க..!

sugarcane halwa

தை திருநாள் அன்று பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு உள்ளதோ அதே அளவிற்கு கரும்பிற்க்கும்  சிறப்பு உண்டு. கரும்புச்சாறு ஜூஸ் நாம் அனைவருமே குடித்திருப்போம் அந்த வகையில் கரும்பை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 

  • கரும்பு சாறு =2 கப்
  • சோளமாவு =2 ஸ்பூன்
  • முந்திரி =கால் கப்
  • நாட்டு சக்கரை =3 ஸ்பூன்
  • உப்பு ஒரு சிட்டிகை
  • ஏலக்காய் =கால் ஸ்பூன்

செய்முறை
கரும்பை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும், அந்தச் சாறுடன் சோளமாவையும் சேர்த்து கட்டி  இல்லாமல் கலந்து வைக்க வேண்டும் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும். அதே பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள கரும்புச் சாறை ஊற்றி மிதமான தீயில் கைவிடாமல் கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அது கெட்டி பதத்திற்கு வரும் அந்த நேரத்தில் நாட்டு சக்கரையும் உப்பும் சேர்த்து கிளறி விட வேண்டும் பிறகுஏலக்காய் , முந்திரி மற்றும் மீதமுள்ள நெய்யையும் சேர்த்து கிளறினால் சுவையான கரும்புச்சாறு அல்வா தயார்.

பயன்கள்

கால்சியம், சோடியம் ,பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இயற்கையாகவே இனிப்பு சுவையை கொண்டுள்ளது.

கரும்பில் காரத்தன்மை அதிகம் உள்ளதால் குடல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நன்மை தரும் நல்ல ஜீரணத்தையும் கொடுக்கும்.

கரும்பில்  கிளைக்கோலிக் ஆசிட் இருப்பதால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான முகப்பரு தோல் சுருக்கம் போன்றவற்றிற்கு நல்ல தீர்வு கொடுக்கும். சருமத்தை இளமையுடன் வைத்துக்கொள்ள உதவும். பற்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது

ஆகவே பொங்கல் பண்டிகைக்கு வாங்கிய கரும்பு  மீதம் இருந்தால் வீணாக்காமல் இந்த மாதிரி செய்து கொடுக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்