சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுமா? இலவங்கப்பட்டை..
நாம் பாரம்பரியமாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பல பொருட்கள் நமது உடல் நலத்தையும் பாதுக்காக்க உதவுகிறது என்பது பலர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
பொதுவாக சுக்கு, ஏலக்காய், மிளகு, சீரகம் போன்றவற்றின் நன்மைகள் நாம் அறிந்ததே. அனால் நாம் அறிந்திடாத ஒரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது, மரத்தின் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் இலவங்கப்பட்டை.
அப்படி என்ன இருக்கிறது இதில் என நினைக்கிறீர்களா, இதோ உங்களுக்கான தொகுப்பு.
- நீரழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.
- நீரழிவு என்பது இரத்ததில் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும்.
- இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
- ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இலவங்கபட்டை இன்சூலின் சுரப்பு மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக கருதப்படுகிறது.
- இலவங்கபட்டையில் ஆல்டிஹைடு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
- மேலும் இது கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீஸின் சிறந்த மூலமாகவும் விளங்குகிறது.
மருத்துவர்களின் கூற்றுப்படி, இலவங்கப்பட்டையை உட்கொள்வது நீரழிவு நோயாளிகளின் போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.