தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில் காணலாம்.

coconut oil (1) (1)

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : தலைமுடிக்கு தினமும் எண்ணெய் வைக்க தேவையில்லை என்று டாக்டர் வந்தனா (தோல் மருத்துவர்) இணையதள பக்கத்தில் சில குறிப்புகளை கூறியுள்ளார். நம்முடைய தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கிறது அதுவே போதுமானது என கூறியுள்ளார். அப்படி தினமும் வைத்தோமேயானால் அது அழுக்குகளை ஈர்த்து வைத்துக் கொள்ளும்.இதனால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய் வைத்தாலே போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தினமும் எண்ணெய் வைப்பதால் தலையில் உள்ள துளைகள் அடைக்கப்பட்டு பொடுகு பிரச்சனை ஏற்படும் என்றும், தலையில் வறண்ட வேர்களை உடையவர்கள் மட்டும் தினமும் எண்ணெய் வைத்துக் கொள்ளலாம் எண்டுறம் மருத்துவர் வந்தனா தெரிவித்துள்ளார்.

எண்ணெய் வைப்பதால் முடி வளருமா?

தலையில் எண்ணெய் வைப்பதால் முடியின் வேர் கால்கள் வறண்டு போகாமல் இருக்க உதவியாக இருக்கிறது. மேலும், கூந்தலின் ஆரோக்கியம் மேம்படவும், ஒரு சிறந்த காரணியாகவும் உள்ளது. ஆனால், அதற்காக முடி வளர்ச்சி மற்றும் முடி கொடுத்தலுக்கு தீர்வாக இருக்குமா என்றால், இருக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் ஆன்ட்டி fungal பண்புகளை கொண்டுள்ளதால் பொடுகை கட்டுப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. ஆனால், அதையும் அளவோடு பயன்படுத்த வேண்டும். .பொடுகு உள்ளவர்கள் ஆலிவ் ஆயில் பயன்படுத்தக் கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எவ்வளவு நேரம் வைக்கலாம்?

தலையில் எண்ணெய் தேய்த்தால் 1-2 மணி நேரம் வரை வைத்து விட்டு தேய்த்து குளித்து விடுவது நல்லது என மருத்துவர் வந்தனா கூறுகின்றார். அதிக நேரம் தலையில் எண்ணெய் இருப்பது அது கிருமிகள் மற்றும் அழுக்குகளை சேர்க்கும் என அவர் கூறுகின்றார். மேலும், முடி வளர்ச்சி என்பது ஜெனிடிக் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தினமும் எடுத்துக் கொள்வதே முக்கிய காரணமாக இருக்கிறது.

மேலும், இரும்பச்சத்து, விட்டமின் பி12 ,பயோட்டின், சிங்க் போன்ற முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உடலில் குறையும் பொழுது முடி உதிர்வு பிரச்சினைகள் ஏற்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும்  தைராய்டு பிரச்சனைகளாலும்  முடி உதிர்வு  ஏற்படுகிறது. சிலருக்கு முடி உதிர்வு பிரச்சனை என்பது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
shreyas iyer Shashank Singh
MKStalin
Shreyas Iyer
Virat kohli - Shreyas Iyer
manoj bharathiraja vijay