நாம் அன்றாட உணவு பட்டியலில் அரிசி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் அரிசி இல்லாத உணவே இல்லை குறிப்பாக அரிசியில் சோறு இட்லி, தோசை முதல் நொறுக்கு தீனி வரை என பல வகைகளில் அரிசியை பயன்படுத்துகிறோம். அதில் இன்று நாம் இடியாப்பம் செய்வது எப்படி என பார்ப்போம். இடியாப்பம் செய்ய பலரும் இட்லி பாத்திரம் உபயோகம் செய்வார்கள். ஆனால், இங்கு பார்த்த முறைப்படி செய்ய இட்லி பாத்திரமே தேவை இல்லை. அது இல்லாமல் கூட நாம் இடியாப்பம் செய்யலாம் அது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மாவு தண்ணீர் உப்பு சேர்த்து தேங்காய் எண்ணெயும் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக மிக்ஸ் செய்யவும். பிறகு அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
சூடு ஆறிய பிறகு அதை இடியப்பை கட்டையில் வைத்து அதற்கு முன் ஒரு கடாயை சூடு படுத்தி மாவை அதிலே பிழியவும். பிறகு மிதமான தீயில் மூன்று நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். மூன்று நிமிடம் கழித்து மற்றொரு பக்கத்தையும் திருப்பி ஒரு நிமிடம் வேக விடவும். இப்போது நமக்கு மெது மெதுவான இடியாப்பம் ரெடி.இதற்கு தேங்காய்ப்பால் மற்றும் குடல் குழம்பு சுவையாக இருக்கும்.
சத்துக்களும் பயன்களும் :
அரிசி மாவில் கார்போஹைட்ரேட் புரோட்டின் இரும்பு சத்து மற்றும் கொழுப்பு உள்ளது. நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. விட்டமின் இ சத்தும் அதிகமாக உள்ளது. இடியாப்பம் நோய் வாய் பட்டவர்களுக்கு ஒரு சிறந்த ஆகாரம் ஆகும். இடியாப்பத்தை மோருடன் சேர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். உடலில் பித்தம் சமநிலைப்படுத்தும்.
நல்ல செரிமானத்துக்கு ஏற்ற உணவாகும். குறிப்பாக இதய நோய் உள்ளவர்களும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கும் இது சிறந்த உணவாகும். காய்ச்சல் இருப்பவர்களுக்கு இளஞ்சூடான நீருடன் சேர்த்து கொடுத்து வந்தால் காய்ச்சல் குணமாகும். குளுட்டன் இதில் இல்லை எனவே வயிற்றிற்கு ஏற்ற உணவாகும்.
தவிர்க்க வேண்டியவர்கள்:
இடியாப்பத்தை நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்தது. மேலும் கோதுமை இடியாப்பம் சிறந்தது. அரிசியின் சத்துக்களும் நம் உடம்புக்கு தேவையான ஒன்றாகும் ஏனெனில் அதில் அதிகம் கார்போக ஹைட்ரேட் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் ஒரு கப் சாதத்திற்கு முக்கால் பங்கு நார்ச்சத்து மிக்க காய்கறிகளை சாப்பிடவும்.
தெரிந்து கொள்வோம் :
மாப்பிள்ளை சம்பா, சேலம் சன்னா அரிசி ஆண்களுக்கு எந்த அரிசி ஆகும். பூங்கார் அரிசி மற்றும் வாலான் சம்பா அரிசி, பிசினி அரிசி போன்றவை பெண்கள் உடல் நலத்திற்கு நல்லது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…