கத்தரிக்காய் பிடிக்காதா? இப்படி வறுத்து குடுத்து பாருங்கள்..!

Default Image

கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இப்படி வறுத்து குடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள்.

பொதுவாகவே கத்தரிக்காய் குழந்தைகளுக்கு பெரிதாக பிடிக்காது. எப்படி செய்து குடுத்தாலும் அதை மட்டும் ஒதுக்கி விடுவார்கள். இதுபோன்று உங்கள் வீட்டிலும் நிகழ்ந்தால் இந்த முறையில் செய்து கொடுத்து பாருங்கள். அவ்வளவு தான் இனிமேல் கேட்டு கேட்டு கத்தரிக்காய் வாங்கி சாப்பிடுவார்கள். கத்தரிக்காய் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் – 1/4 கிலோ, மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன், மிளகுத் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – 3/4 ஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி, இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன், சோளமாவு – 2 ஸ்பூன், எண்ணெய் – இரண்டு ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை: முதலில் கத்தரிக்காய்களை சுத்தமாக கழுவி அதனை வட்ட வட்டமாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த நறுக்கிய கத்தரிக்காய்களை போட்டு வைக்க வேண்டும். பின்னர் ஒரு பெரிய தட்டு எடுத்து கொண்டு அதில் சோளமாவு, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது இவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்து கொள்ளுங்கள். அத்தனையும் அந்த கலவையுடன் சேர்த்து கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் சேர்ந்து பேஸ்ட் பதம் வர வேண்டும், தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய்களை இந்த மசாலா கலவையில் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கருவேப்பிலையை தாளித்து விட்டு பின்னர் அதில் கத்தரிக்காய்களை போட்டு பொன்னிறம் வரும் வரை வேக விட்டு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூப்பரான சுவையான கத்தரிக்காய் வறுவல் ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்