லைஃப்ஸ்டைல்

ஜாக்கிரதை..! இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்..!

Published by
லீனா

பொதுவாக நாம் அனைவருமே நாம் சாப்பிட்ட பின் மீதமுள்ள உணவுகளை, குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்தநாள் அதனை சூடுபடுத்தி சாப்பிடுவது வழக்கம். அப்படி செய்து சாப்பிடக் கூடிய உணவுகள் நமக்கு சுவையாக தெரிந்தாலும், சில சமயங்களில் அந்த உணவுகளில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது.

இப்படிப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடும் போது, நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இந்த உணவுகளால் நமது உயிருக்கு கூட ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது இந்த பதிவில் நாம் எந்தெந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது என பார்ப்போம்.

கடல் உணவுகள் 

நம்மில் அனைவருமே கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவது. அப்படிப்பட்ட உணவுகளை நாம் மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடும் போது, அதில் தீங்கு விளைவிக்க கூடிய பாகாடீரியாக்கள் உருவாகிறது. இப்படி சாப்பிடும் போது, நமக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வறுத்த உணவுகள் 

எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அந்த உணவுகள் நச்சு தன்மையை அதிகரிக்க செய்து, நமது உடலில் பல வகையான நோய்களை ஏற்படுத்தக் கூடும்.

பீட்ரூட் 

முக்கியமாக பீட்ரூட்டை குளிர்சாதன பெட்டியில் வைத்து, மறுநாள் சாப்பிடுவது மிகவும். அதில் நாற்றெட் அதிகமாக காணப்படுவதால், இது நமது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். அதேபோல் கேரட், வெங்காயம் ஆகியவற்றிலும் நைட்ரேட் அதிகமாக காணப்படுவதால், இவற்றையும் மீண்டும்  சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது.

சிக்கன் 

சிக்கனில் அதிகமாக புரோட்டின் காணப்படுகிறது. இதனை சூடுபடுத்தி சாப்பிடும் போது, நமக்குசெரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், இது நச்சுத்தன்மை கொண்ட உணவாக மாறி, நமது உடல் ஆரோக்கியதாகி கெடுக்கிறது.

கீரை வகைகள் 

சமைத்த கீரை வகைகளை நாம் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. அவ்வாறு சாப்பிடும் போது, அதில் உள்ள புரோட்டின் மற்றும் நைட்ரேட் நச்சுத்தன்மையாக மாறி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

காளான் 

காளானை அப்படியே சமைத்து சாப்பிடுவது நல்லது. அதில் உள்ள புரோட்டீன் மீண்டும் சூடுபடுத்தவும் போது, அது விஷமாக மாறும் தன்மை கொண்டது.

பொதுவாகவே நாம் சமைக்க கூடிய உணவுகளை அப்போதே சாப்பிடுவது நல்லது. மாறாக நாம் மறுநாள் வைத்திருந்து சூடுபடுத்தி சாப்பிடுவது நமது உடலுக்கு தீங்கை தான் விளைவிக்கும்.

Recent Posts

எகிறிய தங்கம் விலை… தங்கம் விலை ரூ.640 உயர்வு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…

12 mins ago

ரஜினி – சீமான் சந்திப்பு: விஜய்க்கு எதிரான நடவடிக்கை? பின்னணி என்ன?

சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…

14 mins ago

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா விவாகரத்து: “இருவரும் மகிழ்ச்சியாக இல்லை”…உண்மையை உடைத்த

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…

24 mins ago

“ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்”! அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…

48 mins ago

ஒரே நிகழ்ச்சியில்…ஒரே வரிசையில் பாராமுகத்தில் தனுஷ்-நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…

1 hour ago

Live : திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் …இந்தியா-ஆஸி. டெஸ்ட் போட்டி வரை..!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…

1 hour ago