ஆஹா! உருளைக்கிழங்கு பொரியல்னா இப்புடி இருக்கனும்…அசத்தல் டிப்ஸ் இதோ!

potato

நம் சமையலில்  அதிகப்படியான கிழங்கு வகைகள் இருக்கும். அதில் அனைவருக்கும் பிடித்த சுவை மிகுந்த  கிழங்கு என்றால் உருளைக்கிழங்கு தான். மிகவும் எளிதாகவும் வேகமாகவும் ஒரு பொறியியல் செய்ய வேண்டும் என்றால் இல்லத்தரசிகளுக்கு கண் முன் தோன்றுவது உருளைக்கிழங்கு தான். இந்தக் கிழங்கை நாம் சாம்பார், அவியல் சிப்ஸ் வகைகள் என அனைத்திற்கும் பயன்படுத்தியிருப்போம். ஆனால் இன்று அதன் சுவையை இன்னும் கூட்டிக் கொடுக்கும் முறையில் ஒரு வருவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு= கால் கிலோ
மிளகு= ஒரு ஸ்பூன்
சீரகம்= இரண்டு ஸ்பூன்
சோம்பு= இரண்டு ஸ்பூன்
பட்டை= இரண்டு
கருவேப்பிலை= தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம்= இரண்டு
தக்காளி= இரண்டு
காய்ந்த மிளகாய்= இரண்டு
இஞ்சி பூண்டு விழுது= ஒரு ஸ்பூன்
மல்லித்தூள்= இரண்டு ஸ்பூன்
மிளகாய்த்தூள்= அரை ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு
பெருங்காயம்= அரை ஸ்பூன்

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சீரகம், மிளகு, சோம்பு சிறிதளவு கருவேப்பிலை ஆகியவற்றை மிதமான சூட்டில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3ஸ்பூன்  எண்ணெய் ஊற்றி கடுகு, பட்டை, காய்ந்த மிளகாய் வெங்காயம் போன்றவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும் . பின்பு அதிலே மல்லித்தூள் மிளகாய்த்தூள், பொடி செய்து வைத்துள்ள பவுடரை சிறிதளவு  சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதிலே உருளைக்கிழங்கை சேர்த்து மீதமுள்ள பொடித்த  பவுடரையும் சேர்த்து பெருங்காயமும் சேர்த்து ஐந்து நிமிடம் கலந்து விடவும். மசாலா அதிலேயே நன்கு கலக்கும் வரை கிளறி விடவும். இறக்கும் முன் சிறிதளவு கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து இறக்கவும். இதை நாம் அனைத்து விதமான சாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாகற்காயை இப்படி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

உருளைக்கிழங்கில் மாவு சத்து அதிகம் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு எடை கூட கொடுத்து வரலாம். இது எடை மட்டுமல்லாமல் சருமத்தை நல்ல பொலிவுடன் வைத்துக் கொள்ளும் விட்டமின் சி, விட்டமின் பி, பொட்டாசியம் ,மெக்னீசியம், பாஸ்பரஸ் ,சிங்க்  போன்ற கனிம சத்துக்களுள் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு நல்ல ஒரு மினுமினுப்பை கொடுக்கும்.

வாய்ப்புண் உள்ளவர்களுக்கு  சிறந்த உணவாகும். மூளையின் செயல்பாட்டுத் திறனுக்கு உதவுகிறது.

தவிர்க்க வேண்டியவர்கள்:

கார்போஹைட்ரேட் கிளைசிமிக் அதிகம் உள்ளதால் உடல் பருமன் உள்ளவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் சிறுநீரக தொந்தரவு உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.

உருளைக்கிழங்கை நாம் முறையாக சமைத்து சாப்பிட்டால் நல்லது   அதில் அளவு கடந்த நல்ல பயன்களும் உள்ளது. அதிக எண்ணெயில் வறுத்து  எடுக்காமல் அவித்தோ அல்லது சிறிதளவு எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். கொழுப்பு அதிகம் இல்லாத உணவுகளுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்