தீபாவளி அன்று அதிரசம் இல்லாத இல்லங்கைகளே இருக்காது என்றே கூறலாம் .ஆனால் பலகாரங்களில் மிகவும் கடினமானது இந்த அதிரசம் தான் .என்னதான் சமையல் செய்வதில் கில்லாடியாக இருந்தாலும் விதவிதமாக சமையல் செய்தாலும் ஒரு சில உணவுகள் செய்வதில் மட்டும் எத்தனை வருடம் ஆனாலும் ஒரு சின்ன தடுமாற்றம் ஏற்படும் அந்த வகையில் அதிரசம் செய்வது சற்று கடினம் தான் அந்த சிரமங்களை குறைக்க இந்த முறைகளை பின்பற்றி செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி=1 கிலோ
கல் உப்பு= மூன்று ஸ்பூன்
வெள்ளம்= முக்கால் கிலோ
ஏலக்காய்= அரை ஸ்பூன்
சுக்கு= அரை ஸ்பூன்
செய்முறை:
பச்சரிசியில் கல் உப்பு சேர்த்து கழுவி நன்கு வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய பிறகு ஒரு வெள்ளை துணியில் நிழலில் காய வைக்க வேண்டும் அதிகம் காய வைக்கக் கூடாது 20 நிமிடம் கழித்து கையில் பிடித்தால் அரிசி கையில் ஒட்ட வேண்டும் அந்த அளவுக்கு காய்ந்தால் போதுமானது. ஆனால் தண்ணீர் இருக்கக் கூடாது. அரிசி உலர்ந்த பிறகு அதை சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த மாவு கையில் பிடித்தால் கொழுக்கட்டை மாதிரி பிடிக்க வர வேண்டும் உதிர்த்து விட்டாலும் உதிர வேண்டும் அந்தப் பதத்தில் மாவு இருக்க வேண்டும்.
காய்கறி இல்லாத நேரங்களில் இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு பாருங்க சுவையாக இருக்கும்..
பிறகு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் தட்டி காற்று புகாத மாறு மூடி வைக்க வேண்டும். முக்கால் கிலோ வெள்ளத்தை எடுத்து பாகு ரெடி பண்ண வேண்டும் அதிரசத்திற்கு முக்கியமானது இந்த பாகுபதம் தான். இது சரியாக இருந்தால் அதிரசம் பிரியாமல் நன்கு வரும். அதிரசம் மாவு பிசைய வேண்டிய பாத்திரத்தில் வெல் லத்தை சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும். தண்ணீர், வெல்லம் மூழ்கும் அளவிற்கு இருந்தால் போதுமானது. மிதமான தீயில் வைத்து பாகுவை ரெடி பண்ண வேண்டும். அந்த பாகுவை தண்ணீரில் கலந்தால் கரைய கூடாது கையில் எடுத்தால் அல்வா மாதிரி இருக்க வேண்டும்.
இதுதான் பாகுவிற்கு சரியான பதம். இப்போது மாவையும் சேர்த்து பாகுவுடன் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும் மிதமான தீயிலே கிளறிக் கொண்டிருக்க வேண்டும். இப்போது மாவு இட்லி மாவு பதத்திற்கு வந்த பிறகு கருப்பு எள் சேர்த்து கிளறவும். கர்ப்பிணி பெண்கள் இருந்தால் எள் சேர்ப்பதை தவிர்க்கவும்.
இப்போது இந்த அதிரசம் மாவு ஆறிய பிறகு லேசாக மேலே நெய் தடவி மூடி போட்டு மூன்று நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். நெய் சேர்த்தால் மாவு காயாமல் இருக்கும். மாவு எந்த அளவுக்கு ஊறி வருகிறதோ அந்த அளவுக்கு அதிரசம் நன்றாக இருக்கும். ஒரு வாரம் வரை கூட ஊற வைக்கலாம். மூன்று நாள் கழித்து மாவை கையில் எடுத்து உருட்டினால் மாவு கையில் ஒட்டக்கூடாது வெடிப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.
இதுதான் அதிரசத்திற்கு சிறந்த மாவு. இப்போது ஒரு இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி மாவை உருட்டி அதிரசம் வடிவத்திற்கு தட்ட வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் காய வைத்துக் கொள்ள வேண்டும்.
இளஞ்சூடான எண்ணெயிலே அதிரசத்தை பொறித்து எடுக்க வேண்டும். எண்ணெயில் போட்டவுடன் மேலே உப்பி வரக்கூடாது.
ஒரு பத்து செகண்ட் கழித்து தான் மாவு மேலே வரணும். அப்படி வந்தால் தான் உள்ளே நன்கு வெந்து மெதுவாகவும் வெளியே கிருபசியாவும் அதிரசம் இருக்கும். இந்த முறைகளை பின்பற்றி அதிரசத்தை செய்வோம்.வெல்லம் சேர்த்து செய்துள்ளதால் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை சாப்பிட்டு உடம்பில் பல ச தொந்தரவுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இந்த மாதிரி நமது வீட்டிலேயே தயார் செய்து பாரம்பரிய பலகாரங்களை செய்து சாப்பிடுவோம்.
சென்னை : தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.…
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…