லைஃப்ஸ்டைல்

பாகற்காயை இப்படி செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

Published by
K Palaniammal

பாகற்காய்  என்ற பெயரை கேட்டாலே சிலருக்கு  வாய் முழுக்க கசப்பு வந்துவிடும் குறிப்பாக குழந்தைகளுக்கு. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று கசப்பே இல்லாமல் பாகற்காய் குழம்பு எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் =100 கி
நல்லெண்ணெய்= நான்கு ஸ்பூன்
கடுகு= ஒரு ஸ்பூன்
உளுந்து= ஒரு ஸ்பூன்
வெந்தயம்= ஒரு ஸ்பூன்
சீரகம்= ஒரு ஸ்பூன்
சின்ன வெங்காயம்= 10
தக்காளி= இரண்டு
பச்சை மிளகாய்= இரண்டு
பூண்டு=15
மஞ்சள் தூள்= ஒரு ஸ்பூன்
மிளகாய்த்தூள்= ஒரு ஸ்பூன்
மல்லித்தூள்= ஒரு ஸ்பூன்
தேங்காய்ப்பால்= ஒரு டம்ளர்
புளி = நெல்லிக்காய் அளவு
வெல்லம் = அரை ஸ்பூன்
பெருங்காயம்= அரை ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பாகற்காயை ஐந்து நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, சீரகம் ,வெந்தயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போன்றவற்றை வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளியை பேஸ்ட் ஆக அரைத்து அதிலே சேர்க்கவும் .மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் போன்றவற்றையும் சேர்த்து எண்ணெய்  பிரியும் வரை வதக்கவும்.

மட்டன் சுக்கானா இப்படி தான் இருக்கணும்…! ‘கம கம’ டிப்ஸ் இதோ!

பிறகு ஒரு டம்ளர் தேங்காய் பால் சேர்த்து கிளறி விடவும். சிறிது நேரம் கழித்து புளி  ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் வதக்கி வைத்துள்ள பாகற்காயும் அதிலே சேர்த்து வேக விடவும் எண்ணெய்  பிரிந்து வரும்வரை வேகவைத்து அதிலே வெல்லம் மற்றும் பெருங்காயத்தை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது காரசாரமான கசப்பு இல்லாத பாகற்காய் குழம்பு ரெடி.

பயன்கள்:

விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் இதில் அதிகமாக நிறைந்துள்ளது. பசலி கீரையை விட இரண்டு மடங்கு கால்சியமும் வாழைப்பழத்தை விட இரண்டு மடங்கு பொட்டாசியம் சத்துக்களையும் கொண்டுள்ளது.

சாட்டின் என்ற வீதிப்பொருள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை  குறைக்கும். பாலிபெப்டின்  என்ற என்சைம் உள்ளதால் இன்சுலின் சுரப்பியை மேம்படுத்தும். மேலும்  ரத்தம் சோகை  வராமல் தடுக்கும்.

பாகற்காயை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றில் உள்ள புழுக்களை அளிக்கும் மேலும் அரிப்பு போன்றவற்றிற்கு நல்ல தீர்வாகும்.

கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடை குறைப்ப நினைப்பவர்கள் இந்த பாருக்காயை ஜூஸ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.

பாகற்காய் கசக்காமல் இருக்க கரடு முரடான பகுதியை சீவி விட்டு நறுக்கி சிறிது நேரம் உப்பு போட்டு வைக்க வேண்டும். பிறகு சமைக்கலாம்.

இதை நாம் அதிகமாக எடுத்துக்கொண்டால் அடிவயிறு வலி ,வயிற்று போக்கு ,போன்றவற்றை ஏற்படுத்தும் .கர்ப்பிணி பெண்கள்எப்போதாவது எடுத்து கொள்ளலாம் , தவிர்ப்பது நல்லது .சித்தா மருந்து

ஒரு கொடியை தூக்கினால் ஓராயிரம் காய் இருக்கும் என இந்த பாகற்காய்க்கு பழமொழியும் உள்ளது. கசப்பான விஷயங்கள் எப்போதும் நம்மை பாதிப்பதாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை சில நேரம் அது இனிப்பை விட அதிக பலன்களை கொடுக்கும். ஆகவே இந்தப் பாகற்காயை நாம் வாரம் ஒரு முறை பொறியலாகவோ குழம்பாகவோ எடுத்துக் கொண்டு அதன் பயனை பெறுவோம் .

Published by
K Palaniammal

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

6 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

7 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

8 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

9 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

10 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

11 hours ago