அத்திப்பழம் பிரியர்களே! அத்திப்பழம் சாப்பிடுவதற்கு முன்பு இதையும் தெரிஞ்சுக்கோங்க..

Fig

நாம் அதிகமாக ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை தான் அதிகம் பயன்படுத்துவோம் ஆனால் மிக அரிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு பழம் இந்த அத்திப்பழம். இந்த பழத்தின் நன்மைகளும் ,யார் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதைப் பற்றியும் எந்த நோயை குணப்படுத்த முடியும் என்பதைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

அத்திப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் மற்ற பழங்களை விட நான்கு மடங்கு கால்சியம், பாஸ்பரஸ் ,அயன் உள்ளது.

பயன்கள்

இதயம்

ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை தடுக்கிறது .மேலும் ரத்த குழாய்களில் உள்ள உள்சுவர் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ரத்த குழாய்களில் கொழுப்பு படியாமல் தடுக்கிறது .

தூக்கமின்மை

சிலருக்கு மன கவலையால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். அப்படி உள்ளவர்கள் அத்திப்பழத்தை இரவு நேரத்தில் ஜூஸாக எடுத்துக் கொள்ளவும். மேலும் ஒற்றைத் தலைவலிக்கு ஒரு நல்ல நிவாரணையாகவும் இந்த அத்திப்பழம் உள்ளது.

வயிற்றுப் பகுதி

பித்தப்பையில் கற்கள் ஏற்பட்டிருந்தால் அதனை கரைத்து வெளியாக்குகிறது.
மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் இரவில் இந்த ஜூசை எடுத்துக் கொண்டால் நல்ல மலமிலக்கிய  செயல்படுகிறது.

சுவாசப் பிரச்சனை

மூச்சுக்குழாய்களில் உள்ள அழுக்கை சுத்தம் செய்கிறது, தொண்டையில் உள்ள சதையை  மென்மையாக்குகிறது.மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்ந்து அத்தி பழம் எடுத்து கொள்ளவும் .

நீரிழிவு நோய்

அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழத்தைசாப்பிட்டு வரலாம் . ஜூஸ் போடும்போது இனிப்பு சுவைக்காக எதையும் சேர்க்காமல் இந்த பழத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரையையும் கட்டுக்குள் வைக்கும்.

உணவுக்கு முன் இதை நீங்கள் எடுத்துக் கொண்டு பிறகு உணவின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.

வெண்புள்ளி

வெண்புள்ளி இருப்பவர்கள் அத்திப்பழம் ஜூசை தொடர்ந்து உள்ளுக்குள் எடுத்துக்கொண்டும் வெளியில் பன்னீருடன் கலந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அடடே! பத்தே நிமிஷம் போதும் பச்சரிசி பாயாசம் செஞ்சு அசத்த ….

ஜூஸ் போடும் முறை

இந்த பழத்தை  ஜூஸ் போடும்போது இதை நன்றாக கழுவி தோலை நீக்கி விட வேண்டும் பிறகு அதை இரண்டாக நறுக்கி விதைகளில் புழுக்கள் உள்ளதா என அறிந்து பிறகு ஜூஸாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

யார் சாப்பிடக்கூடாது

  • அத்திப்பழத்தை பொருத்தவரை சர்க்கரை நோயாளிகள் உட்பட அனைவருமே எடுத்துக் கொள்ளலாம். அலர்ஜி உள்ளவர்கள் மட்டும் தவிர்க்கலாம்.
  • ஆகவே அதிகமாக நாம் பயன்பாட்டில் இல்லாத இந்த பழத்தை இனிமேலாவது இதன் பயன் கருதி வாரத்தில் மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு பயனடைவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்