அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை மனிதர்களின் கைகள், பாதம், முகம் என பல விஷயங்களை வைத்து அவர்தம் எதிர்காலம் கணிக்கப்படுகிறது; இது போக ஒவ்வொருவரும் பயன்படுத்தும் பொருட்கள், முக அல்லது உடல் அமைப்பு போன்ர விஷயங்களை வைத்தும் கூட அவர்களின் குணாதிசயத்தை கணித்து சொல்ல முடியும்.
இந்த வகையில், உங்கள் உதட்டின் நிறம், உங்களை பற்றி என்ன சொல்லுகிறது என்பது குறித்து இப்பதிப்பில் காணலாம்.
சிவந்த உதடுகள் கொண்ட நபர்கள் அல்லது உதட்டிற்கு சிவப்பு நிற சாயத்தை பயன்படுத்த விரும்பும் நபர்கள் பயமில்லாதவர்களாக, நட்பு மனப்பான்மை கொண்டவர்களாக, அதிக காதலை – அன்பை வெளிப்படுத்தும் நபர்களாக, சக்தி மற்றும் குறிக்கோளை அடையும் இலட்சியம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உதட்டிற்கு பிங்க் நிறத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் அதிக அழகு கொண்டவர்களாக, அதிக அன்பு நிறைந்தவர்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது.
இந்த நிற உதட்டு சாயத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்புபவர்களாவர்.
இயற்கை நிற உதடுகளை கொண்ட நபர்கள் மிகவும் அமைதியானவர்களாக, எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் நபர்களாக, எளிமையானவர்களாக, திறந்த மனம் கொண்டவர்களாக இருப்பர்.
உதட்டிற்கு கருமை நிறத்தை தேர்ந்தெடுக்கும் நபர்கள் மிகவும் கடினமான மனோபாவம் கொண்டவர்களாக, அதிக அடம், பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…