நல்ல அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் டாப் 3 வழிகள்!
ஒவ்வொரு பெண்ணுக்கும் தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஒரு பெண்ணை அழகு என்று கூற முற்படும் பொழுது அவளது தலை முதல் பாதம் வரை அவள் அளக்கப்பட்டு அதன் பின்னரே அழகி என்று மொழியப்படுகிறாள். அவ்வாறு ஒருவரை பார்க்கும் முதல் பார்வையில் முதலில் தெரிவது தலைப்பகுதியும் முகமுமே!
அப்படிப்பட்ட முதல் தோற்றம் நல்ல அபிப்ராயத்தை அளிக்க வேண்டும்; பெரும்பாலானோர் முக அழகை எப்பாடு பட்டாவது மேக்கப் மூலம் கொண்டு வந்து விடுவர். ஆனால் கூந்தல் அழகை கொணர்வது தான் சற்று கடினம். இந்த கடின விஷயத்தை இலகுவாக்க உதவவே இந்த பதிப்பு! இப்பதிப்பை படித்து சிறந்த கூந்தலை பெறுவது எப்படி என்று அறியுங்கள்.!
முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதனை தலைமுடியில் தடவி நன்கு ஊற வைக்க வேண்டும்; 20-30 நிமிடங்கள் ஊற வைத்த பின் தலைமுடியை நன்கு கழுவ வேண்டும். இது தலைமுடி நன்கு வளர பெரிதும் உதவும்; முட்டையில் இருக்கும் வெள்ளைக்கரு முடிக்கு தேவையான புரதச் சத்தினை தந்து முடி வளர்ச்சியை தூண்டும்.
சுரைக்காய் சிகிச்சை
சுரைக்காயை சாறு எடுத்து அதனை தலைமுடிக்கு தடவி 20-30 நிமிடங்கள் ஊற வைத்தால் அது முடியினை நன்கு அடர்த்தியுடன் வளரச் செய்யும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அதை தலைக்கு ஷாம்பூ போட்டு குளித்த பின், தலைமுடியில் தடவவும். இது தலையில் இருக்கும் அதிகப்படியான ஷாம்பூ மற்றும் வேதிப்பொருட்களை நீக்க உதவும். இதை தலைமுடியில் தடவி குறைந்த பட்சம் 5 நிமிடங்களாவது வைத்து இருந்துவிட்டு, பின்னர் தலைமுடியை நீரில் நன்கு அலசி கழுவவும். இது கூந்தலை வேதித்தன்மையற்று வளரச்செய்யும்.