பனிக்காலத்தில் உண்டாகும் பனிப்பத்து போக உதவும் குறிப்புகள்..!
பனிக்காலம் தொடங்கி விட்டாலே, ஆண்கள் – பெண்கள் என அனைவரும் சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி அனைவரும் எதிர்கொள்ளும் முக்கிய சரும பிரச்சனையில் முதல் இடம் வகிப்பது பனிப்பத்து மற்றும் வறண்ட சருமம் தான். இந்த பனிபத்து முகத்தில், உடலின் பல பாகங்களில் என தோன்றி சரும அழகையே குலைத்து விடுகிறது.
பனிக்காலத்தில் பனிக்காலத்தில் உண்டாகும் பனிப்பத்தினை போக்க உதவும் குறிப்புகள் பற்றி, இந்த பதிப்பில் காணலாம்.
நீர்ச்சத்து முக்கியம்
பனிக்காலத்தில் சருமம் விரைவில் ஈரப்பத்ததை இழந்து விடுவதால், அதிக நீர்ச்சத்து அவசியம். எனவே உடலுக்கு நீர்ச்சத்து அளித்து, சருமத்தின் பனிப்பத்து போன்ற பிரச்ச்னைகளை தீர்க்க உதவும் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் சாறுகளை பருகுதல் அல்லது அவற்றை சருமத்திற்கு பயன்படுத்துதல் வேண்டும்.
வீட்டு வைத்திய கிரீம்
பால், தேன், கிளிசரின் போன்றவற்றை தலா 1 தேக்கரண்டி எடுத்து நன்கு கலந்து கொண்டு அதை சருமத்தில் பனிப்பத்து உள்ள இடங்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
குளியல் இரகசியம்..
பனிக்காலத்தில் குளிக்க பயன்படுத்தும் சோப்புகளின் மீது தனிக்கவனம் செலுத்தல் அவசியம்; இந்த மாதிரியான நேரத்தில் கடின சோப்புகளை விடுத்து, பியர்ஸ், டவ் போன்ற மிருதுவான சோப்புகளை பயன்படுத்தல் அவசியம்.
மேலும் குளிக்க செல்லும் முன், தேகத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு குளித்தல் மிகவும் நல்லது.
ஈரப்பதமூட்டி – மாய்ஸ்டரைசர்
சருமத்திற்கு நல்ல ஈரப்பதம் ஊட்டும் கிரீமை உடலுக்கு பயன்படுத்துதல் நல்லது. நிவியா, வாஸ்லின் போன்ற கிரீம் வகைகளை உபயோகிக்கலாம்.
பனிக்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்புகளை சரி செய்ய லிப் பால்ம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.