சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் இது தான்

Default Image
  • நமது சருமம் வறட்சி அடைவதற்கான காரணங்கள் இது தான்.

இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றாக சரும பிரச்சனைகள் உள்ளது. இதற்க்கு உடனடி தீர்வு காண்பதற்காக அனைவரும் செயற்க்கையான மருத்துவ முறைகளையே நாடுகின்றனர். ஆனால், இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.

Related image

எனவே நாம் எப்போதும் சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட இயற்கையான மருத்துவ முறைகளை மேற்கொள்வதே சிறந்தது. தற்போது இந்த பதிவில், சருமம் என்ன காரணங்களுக்காக வறட்சி அடைகிறது என்பது பற்றி பார்ப்போம்.

சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன், செதில் செதிலாக காணப்படும். இந்த பிரச்சனைகள் அதிகமாக குளிர்காலங்களில் தான் ஏற்படக் கூடும்.

காற்று

Image result for காற்று

சருமம் வறட்சி அடைவதற்கு காற்றும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. ஏசி அறைகளில் அதிகமாக இருக்கும் போது அது சருமத்தை வறட்சி அடைய செய்கிறது. அதுமட்டுமல்லாமல், சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.

வெந்நீர்

நம்மில் அதிகமானோர் வெந்நீர் உபயோகிப்பதுண்டு. சிலர் குளிப்பதற்கு வெண்ணீர் பயன்படுத்துகின்றனர். சிலர் குடிப்பதற்கு வெண்ட்ட்ற பயன்படுத்துகின்றனர். ஆனால் வெந்நீர் பயன்படுத்துவதாலும், சருமம் வறட்சி அடைகிறது.

Image result for வெந்நீர்வெந்நீரில் நீண்ட நேரம் இருப்பதால், அது சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையை முற்றிலும் வெளியேற்றி உலரச் செய்துவிடுகிறது.

சோப்புகள்

இன்று நாம் நமது உடலை தூய்மைப்படுத்துவதற்கு பல கெமிக்கல்கள் கலந்த சோப்புகளை உபயோகின்றோம். இது உடலளவில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Related image
இப்படிப்பட்ட சோப்புகளை  உபயோகிப்பதால், இது நமது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை வெளியேற்றி சருமத்தை வறண்ட சருமமாக மாற்றுகிறது. அடிக்கடி கைகள் மற்றும் கால்களுக்கு சோப்புகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

மருந்துகள்

நாம் பயன்படுத்தும் மருந்துகளாலும் சருமம் வறட்சி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நாம் நமது உடலில் ஏற்படும் நோய்களுக்கு தீர்வு காண்பதற்காக மருந்தெடுக்கிறோம்.
Image result for மருந்துகள்
ஆனால், அதற்காக கொடுக்கப்படுகின்ற மருந்துகளை உண்ணும் போது, அது சரும வறட்சியை ஏற்படுத்தக் கூடும். அதிகமாக இரத்த அழுத்த நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் இப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது.

நோய்கள்

இரத்தத்தில் உள்ள  குளுகோஸின் அளவு அடிக்கடி  மாறுவதால்,சருமத்தில் வறட்சி ஏற்படுகிறது. மேலும் தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளினால், சருமவறட்சி ஏற்படக் கூடும்.
Related image
மேலும், அதுமட்டுமின்றி சத்தான மற்றும் சரிவிகித உணவு வகைகளை சாப்பிடாமல் இருப்பதும், சரும வறட்சிக்குக் காரணமாகும். அதுவும் வயதான பெண்களுக்கு, ஹார்மோன்களின் மாறுபாடுகளால் வறண்ட சருமம் ஏற்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்