பருக்கள் இல்லாத பளபளப்பான முகத்தை பெற சூப்பர் டிப்ஸ்!
இன்றைய இளம் தலைமுறையினரின்மிகப்பெரிய பிரச்சனையே முகத்தில் ஏற்படும் பருக்கள் தான். இந்த பருக்களால் நமது முக அழகு கேட்டு போவதோடு, சரும ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
தற்போது, இந்த பதிவில் பருக்கள் இல்லாத பளபளப்பான முகத்தை பெறுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
சோப்பை பயன்படுத்தாதீர்
இன்று நாம் பல விதமான, வகை வகையான சொத்துக்களை பயன்படுத்துகிறோம். இந்த சோப்புகளும் நமது முகத்தில் பாரு ஏற்படுவதற்கு வலி வகுக்கிறது. எனவே ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல், சோப்புகளை பயன்படுத்தகே கூடாது.
மற்ற நேரங்களில் பால் அல்லது சந்தனத்தை முகத்தில் பூசி விட்டு நீரால் கழுவ வேண்டும்.
ரோஸ் வாட்டர்
தினமும் இரவில் முகத்தை நீரால் கழுவிய பின், முகத்தில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரை பூசி விட்டு உறங்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால், சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறிவிடும்.
பற்பசை
முகத்தில் ஏதேனும் பருக்கள் சீழ் வைத்த நிலையில் இருந்தால், அவற்றின் மீது பற்பசையை தடவ வேண்டும். இவ்வாறு செய்து அந்த பருக்கள் காய்ந்து, அப்படியே மறைந்துவிடும்.