உங்கள் முக கருமை நீங்கி பளிச்சுனு வெண்மையாக சூப்பர் டிப்ஸ்!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே சரும பிரச்சனை தான். இதற்கு பலரும் பல மருத்துவ முறைகளை கையாளுகின்றனர். இதற்கு நாம் செயற்கையான மருத்துவ முறைகளை பின்பற்றுவதை விட, இயற்கையான முறைகளை பின்பற்றுவது சிறந்தது.
தற்போது, இந்த பதிவில் முகக் கருமை நீங்கி, பளிச்சென்று வெண்மையாக சில வழிகளை பாப்போம்.
செய்முறை : 1
ஒரு பாத்திரத்தில் கேரட்டை எடுத்து, இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, 30 நிமிடங்கள் ஊறிய பின்பு, முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
செய்முறை : 2
ஒரு பெளளை எடுத்து, அதில் பாதி எலுமிச்சையின் சாற்றை பிழிந்து, அந்த சாற்றில், நான்கு டீஸ்பூன் சந்தன பொடியை ஒன்றாக கலந்து, முகத்தில் பூசி வந்தால், வெயிலினால் சருமம் கருமை நிறமாவதை தடுத்து, முகத்தை பொலிவாக்குகிறது.
செய்முறை : 3
வெயிலில் வெளியில் செல்லும் போது, சன் ஸ்கிரீன் அடங்கிய க்ரீமை கை, கால்களுக்கு பூசிக்க கொள்ள வேண்டும். அவ்வாறு பூசிக் கொண்டால், வெயிலினால் ஏற்படும் கருமையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.