எப்பொழுதுமே நீங்கள் சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன தெரியுமா?

Published by
Soundarya

நம்மில் ஒவ்வொருவரும் பொதுவாகவே குளிக்கும் பொழுது உடலில் சில பாகங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் அன்றாட நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறிந்திருந்தும் கூட, நம் அவசர உலகம் – நம் அவசர மனநிலை நம்மை சரியாக எந்த செயல்களையும் ஆற்ற விடுவதில்லை.

இந்த பதிப்பில், எப்பொழுதுமே நாம் ஒவ்வொருவரும் அதிக முக்கியத்துவம் கொடுத்து சரியாக கழுவாத உடல் பாகங்கள் என்னென்ன, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று காணலாம்.

கைகள்

கைகளை சமைக்கும் பொழுது, சாப்பிடும் முன், சாப்பாட்டிற்கு பின் என முக்கிய தருணங்களின் பொழுது நன்கு கழுவுதல் வேண்டும். ஆனால், நம்மில் எவரும் இதை சரியாக செய்வதில்லை.

சரியாக கழுவப்படாத கைகளால் தீவிர நோய்த்தொற்றுகள் தாக்கும் அபாயம் உண்டு. குளிக்கையிலும் கைகளை நன்கு கழுவுதல் வேண்டும்.

முகம்

முகத்திற்கு அதிக முக்கியத்துவத்தை பெண்கள் அளிப்பர்; இந்நாட்களில் ஆண்களும் முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். என்ன தான் ஆணும் பெண்ணும் முக அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், முக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது மிககுறைவு தான்.

அழகிற்காக மேக்கப் போட்டுக் கொள்ளும் நாம், ஆரோக்கியத்திற்காக நன்கு முகத்தை கழுவுவதோ, முகத்தின் சுத்தத்தை பராமரிப்பதோ நமக்கு இரண்டாம் பட்சமாக போய்விட்டது.

தலை – முடியின் வேர்ப்பகுதி

தலைக்கு குளிக்கையில் முடியின் வேர்க்கால்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை; இதனாலேயே முடி உதிர்தல், உடைதல், வளர்ச்சி குன்றுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை நினைவில் கொண்டு, தலையை சுத்தப்படுத்தும் செயலை மேற்கொள்ளுங்கள்.

பற்கள்

பற்களின் மீது அதிக கவனம் செலுத்தாமல் ஏனோ தானோ என்று தான் பற்களை துலக்குகிறோம்; இதனால் பற்களில் பல்வேறு நோய்த்தொற்றுகள் உருவாகி பல்கி பெருகும் அபாயம் உண்டு; இதன் பாதிப்பாகவே பற்களின் மஞ்சள் நிறம், பற்களில் குழி ஏற்படுதல், ஈறுகளில் பிரச்சனை போன்றவை ஏற்படுகின்றன.

காது

நாம் அனைவரும் சுத்தமாக கண்டுகொள்ளாத மற்றொரு உறுப்பு காது; குளிக்கும் பொழுது காதில் தேய்த்த சோப்பைக் கூட சுத்தமாக கழுவுவதில்லை பெரும்பாலோனோர். காதுகளை சுத்தமாக கழுவாமல், பராமரிக்காமல் இருந்தால் செவிடாகும் நிலை கூட ஏற்படலாம்.

பாதம்

பாதங்களை யாரும் சரிவர பராமரிப்பதில்லை; பாதங்கள் இல்லையெனில் நாம் அனைவரும் அசையாத பொருட்கள் போல் ஒரே இடத்தில் இருக்க நேரிடும் என்ற உண்மையை உணர்ந்து பாதங்களின் சுத்தத்தில் இனியாவது கவனம் செலுத்துவோமாக.

தொப்புள்

கருவில் உருவான நிமிடத்தில் இருந்து பிறப்பது வரை மிக முக்கியமான உறுப்பாக விளங்குவது தொப்புள் ஆகும்; தொப்புளை அடிக்கடி அல்லது குறைந்தபட்சம் இரண்டு வாரத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்வது உடல் நலத்திற்கு நல்லது.

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

3 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

4 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

5 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

5 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

7 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

7 hours ago