முக அழகை மெருகூட்டுவதில் முட்டையின் பெரும்பான்மையான பங்கு!
நமது அன்றாட வாழ்வில் நமது முகத்தின் அழகை பராமரிப்பதற்காக பல வகையான பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், நமக்கு பலனை தருவதில்லை.
அந்தவகையில், முட்டை நமது முக அழகை மெருகூட்டுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.
முகம் பளிச்சிட
ஒரு சிறிய பெளலில் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நுரைக்குமாறு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி, 30 நிமிடம் கழித்து வெந்நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளவென இருக்கும்.
முடிகளை அகற்ற
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதில் முட்டை மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. முட்டை வெள்ளை கருவை எடுத்து, அதனுடன் அரை டீஸ்பூன் சோளமாவு மற்றும், 1 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து முகம், கை மற்றும் கால்களில் தடவினால் தேவையற்ற முடிகள் உதிர்ந்துவிடும்.
கை வறட்சி நீங்க
கைகளில் வறட்சி நீங்க, முட்டையின் மஞ்சள் கரு, தேன், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை, எலுமிச்சை ஆகியவற்றை கலந்துகொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு முறையும் கைகளை கழுவும் போது, கைகளில் தடவி கழுவினால் கைகளில் உள்ள வறட்சி நீங்கும்.
முடி கருப்பாக
முடி கருமையாக இரண்டு முட்டைகளில் இருந்து வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து, அதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாற்றை கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து பின்னர் குளித்தால், தலை முடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும்.